For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"மிஸ்ட் கால் மிராக்கிள்"... 10 கோடி உறுப்பினர்களை தேற்றி விட்டதாம் பாஜக!

Google Oneindia Tamil News

டெல்லி: உலகிலேயே மிகப் பெரிய கட்சியாக பாஜக உருவெடுத்திருப்பதாகவும், தங்களது கட்சிக்கு 10 கோடி உறுப்பினர்கள் உள்ளதாகவும் அக்கட்சி நேற்று அறிவித்தது.

இந்த சந்தோஷத்தை டெல்லியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும், மோடியை வாழ்த்தி கோஷமிட்டும் கொண்டாடி மகிழ்ந்தனர் பாஜக தலைவர்கள், தொண்டர்கள்.

மேலும் நேற்று நடந்த ஒரு நாள் பாஜக கருத்தரங்குக்கு வந்த பாஜக தலைவர் அமீத் ஷாவுக்கும் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து கருத்தரங்கில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கூறுகையில், அனைவரும் எழுந்து நின்று அமீத் ஷாவுக்கு வாழ்த்து தெரிவித்தோம். எங்களது கட்சிதான் உலகிலேயே மிகப் பெரிய கட்சியாக தற்போது உருவெடுத்துள்ளது என்றார் அவர்.

முன்னதாக அமீத் ஷா வெளியிட்ட ஒரு டிவிட் தகவலில், பாஜக தற்போது 10 கோடி+ கட்சியாகும். உலகில் ஜனநாயக இயக்கம் ஒன்றுக்குக் கிடைத்த மிகப் பெரிய மைல் கல்லாகும் இது. ஜெய் ஹிந்த் என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும் பிரதமர் மோடியும் இதற்காக கட்சியினருக்கு வாழ்த்து தெரிவித்து டிவிட் போட்டிருந்தார். அதில், பாஜக தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் வாழ்த்துகள் என்று கூறியிருந்தார் மோடி.

பாஜக உறுப்பினர்கள் 10 கோடிப் பேரில், மகாராஷ்டிராவில் மட்டும் ஒரு கோடி பேர் சேர்ந்துள்ளனராம்.

குஜராத் முதல்வராக இருந்த மோடி பின்னர் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் மிஸ்ட் கால் மூலம் உறுப்பினர் சேர்க்கையை தீவிரமாக நடத்தி வந்தது பாஜக என்பது நினைவிருக்கலாம். அமீத் ஷா தலைவரான பின்னர் இது மேலும் வேகம் பிடித்தது. இந்த மிஸ்ட் காலை வைத்து பலர் கிண்டலடித்தாலும் கூட பாஜக அதைக் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து பிரசாரம் செய்து வந்தது.

English summary
The Bharatiya Janata Party (BJP) on Sunday claimed to have crossed the 10-crore membership mark continuing to be the "largest" party in the world.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X