For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மதபோதகர் ஜாகீர் நாயக்கின் அறக்கட்டளைக்கு 5 ஆண்டுகள் தடை !

மதபோதகர் ஜாகீர் நாயக்கின் அறக்கட்டளைக்கு மத்திய அரசு 5 ஆண்டுகள் தடை விதித்துள்ளது.

By Karthikeyan
Google Oneindia Tamil News

டெல்லி: இஸ்லாமிய மதபோதகர் ஜாகீர் நாயக்கின் இஸ்லாமிக் ரிசர்ச் பவுண்டேஷன் (ஐஆர்எப்) கல்வி அறக்கட்டளைக்கு 5 ஆண்டுகள் தடை மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இஸ்லாமிய மதபோதகர் ஜாகீர் நாயக் "இஸ்லாமிக் ரிசர்ச் பவுண்டேஷன்" (ஐஆர்எப்) கல்வி அறக்கட்டளை, 'பீஸ் டிவி' ஆகியவற்றை நிறுவியுள்ளார். இவர் தீவிரவாதத்தை தூண்டும் வகையில் மதப் பிரச்சாரம் செய்து வருவதாகவும், பிற மதங்களை இழிவுப் படுத்தி, முஸ்லிம்கள் அனைவரும் தீவிரவாதிகளாக மாற வேண்டும் என்றும் சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறி வருவதாக ஜாகீர் நாயக் மீது சரமாரியாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.

zakir naik NGO banned for five years

அதை தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் விசாரணை நடத்தியது. விசாரணையில் வெளிநாட்டு அன்பளிப்பு கட்டுப்பாடுகள் சட்டத்தை (எப்சிஆர்ஏ) ஐஆர்எப் கல்வி அறக்கட்டளை மீறி செயல்பட்டுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவரின் ‛இஸ்லாமிக் ரிசர்ச் பவுண்டேஷன்' எனப்படும் என்.ஜி.ஓ., அமைப்புக்கு சட்ட விரோதமாக வெளிநாடுகளில் நிதி வருவது ஆதாரப்பூர்வ தெரியவந்தது. மேலும், பயங்கரவாதத்திற்கு ஆதரவாக பரப்புரை செய்ததும் தெரியவந்தது.

இதுதொடர்பாக, உளவுத் துறை அளித்துள்ள பல்வேறு ஆதாரங்களின் அடிப்படையில் ஜாகீர் நாயக் நடத்தும் என்ஜீஓ நிறுவனம் சட்டத்திற்கு புறம்பான நிறுவனம் என அடையாளப்படுத்தப்படுவதாகவும், 5 ஆண்டு தடை விதிக்கவும் மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

English summary
The government has banned controversial preacher Dr Zakir Naik's NGO the Islamic Research Foundation for five years.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X