For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மீண்டும் தாக்க தொடங்கியது ஜிகா வைரஸ்... குஜராத்தில் 3 பேருக்கு பாதிப்பு

உலகையே அச்சுறுத்திய ஜிகா வைரஸ் மீண்டும் இந்தியாவை மிரட்ட ஆரம்பித்துள்ளது. குஜராத் மாநிலத்தில் 3 பேருக்கு ஜிகா தாக்கம் இருப்பதை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது.

By Devarajan
Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் 3 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது. இதனால் மீண்டும் ஜிகா வைரஸ் பீதி எழுந்துள்ளது.

கடந்த 2007 மற்றும் 2013ம் ஆண்டுகளில் பசிபிக் நாடுகள், அமெரிக்க நாடுகளான பிரேசில், கொலம்பியா, ஆப்ரிக்கா என ஜிகா வைரஸ் தாக்கம் பரவ தொடங்கியது. மத்திய அமெரிக்க கண்டத்தில் உள்ள சுமார் 23 நாடுகளில் ஜிகா பாதிப்பு காரணமாக ஏராளமானோர் உயிரிழந்தனர்.

 Zika virus in India, WHO says three cases found in Gujarat state.

இதையடுத்து தற்போது ஜிகாவுக்கு எதிராக உலக சுகாதார நிறுவனம் சர்வதேச நாடுகளுடன் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்த சூழலில் இந்தியாவில் ஜிகா பாதிப்பு இல்லை என்று கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில் உலக சுகாதார நிறுவனத்திற்கு மத்திய அரசு அளித்துள்ள அறிக்கை ஒன்றில் இந்தியாவில் 3 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உள்ளது என தெரிவித்துள்ளது. அவர்கள் 3 பெரும் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.

இதனால் விமானத்த் செல்லும் பயணிகள் மத்தியில் மீண்டும் ஜிகா வைரஸ் பீதி எழுந்துள்ளது.

English summary
Zika virus in India, WHO says three cases found in Gujarat. Central government says all victims have recovered.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X