ஜப்பானில் நிலநடுக்கம்: ரிக்டரில் 5.3 ஆக பதிவு

டோக்கியோ: ஜப்பானின் கட்சூரா பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த சில மாதங்களாக பசுபிக் கடல் பகுதியை ஒட்டியுள்ள நாடுகளில் தொடர்ச்சியாக நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இந்த பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 5 முதல் 6.5 வரை பதிவாகியுள்ளது.

5.3 magnitude earthquake shakes in japan

இந்த நிலையில், ஜப்பானின் கட்சூரா மற்றும் சிபா ஆகிய பகுதிகளில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கட்சூரா பகுதியில் இருந்து சுமார் 161 கிலோமீட்டர் தொலைவில், 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் காரணமாக ஏற்பட்ட பொருட்சேதம் மற்றும் உயிர்ச்சேதம் பற்றிய உடனடி தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. முன்னதாக கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ஜப்பானில் 6.1 ஆக நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

English summary
5.3 magnitude earthquake shakes in japan
Please Wait while comments are loading...

Videos