For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்தோனேஷியாவில் கடலுக்கு அடியில் பெரும் நிலநடுக்கம்- சுனாமி எச்சரிக்கை: இந்தியாவுக்கு பாதிப்பில்லை

By Mathi
Google Oneindia Tamil News

ஜகார்தா: இந்தோனேஷியாவின் கிழக்குப் பகுதியில் இன்று காலை கடலுக்கு அடியில் 7.3 ரிக்டர் அளவுக்கு மிகக் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து 300 கி.மீ. சுற்றுப் பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த சுனாமி அலைகள் இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸை ஆகிய நாடுகளையே சிறிய அளவில் தாக்கலாம் என்றும், இந்தியா- அந்தமானுக்கு பாதிப்பு இருக்காது என்றும் தெரிகிறது.

7.3 quake hits Indonesia, tsunami warning issued

இந்தோனேஷியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள கோடா டெர்னேட் என்ற தீவின் வட மேற்கே 154 கி.மீ. தூரத்தில் கடலுக்கு அடியில் 47 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது ரிக்டர் அளவுகோளில் 7.3 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை உயிர்ச் சேதங்கள், பொருட் சேதங்கள் குறித்து தகவல் ஏதும் இல்லை.

ஆனால், இந்த மிக சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் கோடா டெர்னேட் தீவுக்கு 300 கி.மீ. சுற்றளவை சுனாமி அலைகள் தாக்கலாம் என்று பசிபிக் பெருங்கடல் சுனாமி எச்சரிக்கை மையம் கூறியுள்ளது. இதனால் இந்தோனேஷியா, பிலிப்பைன்சின் சில பகுதிகளே பாதிப்புக்கு உள்ளாகும்.

கடலுக்கு அடியில் மிக ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி அலைகளின் உயரமும் 1 மீட்டருக்குக் குறைவாகவே இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

2004ம் ஆண்டில் இந்தேனேஷியாவின் மேற்குப் பகுதியில் உள்ள பாண்டா அசேவில் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டதால் இந்தியப் பெருங்கடலில் பெரும் சுனாமி அலைகள் உருவாகி அந்தமானை தாக்கியதோடு இந்தியாவையும் தாக்கின. இதில் தமிழகத்திலும் இலங்கையிலும் ஆயிரக்கணக்கானோர் பலியாயினர்.

ஆனால், இம்முறை இந்தோனேஷியாவுக்கு கிழக்கே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சுனாமி அலைகளும் பசிபிக் கடலில் தான் பரவ உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
A 7.3-magnitude quake hit Indonesian waters Saturday morning and has the potential to generate tsunami waves along nearby coasts, a monitoring agency said.According to the U.S. Geological Survey, the quake hit 154 kilometres northwest of Kota Ternate at a depth of 47 kilometres.There are no immediate reports of casualties or damage. The Pacific Tsunami Warning Center said the quake could cause hazardous tsunami waves within 300 kilometres of the epicentre along the nearby coasts of Indonesia and the southern Philippines. Waves could reach up to a metre or less, it said. The nearest communities of Tabukan Tengah on North Sulawesi island could be at risk within an hour or so if a tsunami occurs, the agency said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X