பேச்சை மீறி வேலைக்கு சென்ற பெண்.. தலையை துண்டித்து கொன்ற கணவன்.. பாகிஸ்தானில் பயங்கரம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: பேச்சை மீறி வேலைக்கு சென்ற பெண்ணை கணவனே தலையை துண்டித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ஷாம்பி பாட்டியன் பகுதியைச் சேர்ந்தவர் நஸ்ரின். இவரது கணவர் அஃப்ராஹிம்.

இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். 37 வயதான நஸ்ரின் அங்குள்ள தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார்.

வேலைக்கு சென்ற மனைவி

வேலைக்கு சென்ற மனைவி

ஆனால் நஸ்ரின் வேலைக்கு செல்வது அவரது கணவர் அஃப்ராமுக்கு பிடிக்கவில்லை எனத் தெரிகிறது. இதன் காரணமாக கணவன் மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

மனைவி மீது கோபம்

மனைவி மீது கோபம்

இதனால் மனைவி மீது கடும் கோபத்தில் இருந்துள்ளார் அஃப்ராம் இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நஸ்ரின் தூங்கிக்கொண்டிருந்தார்.

தலையை துண்டித்த கணவன்

தலையை துண்டித்த கணவன்

அப்போது குழந்தைகளை தனியறையில் பூட்டிய அஃப்ராம் மனைவி நஸ்ரினை தலையை துண்டித்து கொலை செய்துள்ளார். பின்னர் வீட்டைவிட்டு அவர் தப்பியோடிவிட்டார்.

சடலமாக நஸ்ரின்

சடலமாக நஸ்ரின்

குழந்தைகளின் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் கதவை திறந்து அவர்களை மீட்டனர். அப்போது அறையில் தலை தனியாக துண்டிக்கப்பட்ட நிலையில் நஸ்ரின் சடலமாக கிடப்பதைக் கண்ட அவர்கள் போலீஸ்க்கு தகவல் தெரிவித்தனர்.

கவுரவ கொலை

கவுரவ கொலை

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி, தடயங்களை சேகரித்தனர். அஃப்ராம் கவுரவத்துக்காக மனைவியை கொலையை செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அஃப்ராமை தேடி வருகின்றனர்.

Minor girl was abducted in Pakistan and converted to Islam-Oneindia Tamil

ஆயிரத்தில் ஏன்? லட்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள், தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்!

English summary
A man in Pakistan's Punjab province has decapitated his 37-year-old wife with a chopper for refusing his demand to quit her job.
Please Wait while comments are loading...