For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

100 அடி உயரத்தில் பழுதாகி நின்ற ரோலர் கோஸ்டர்... அந்தரத்தில் தொங்கியவர்கள் மீட்பு

அமெரிக்காவில் உள்ள தீம் பார்க்கில் 100 அடி உயரத்தில் ரோலர் கோஸ்டர் பழுதாகி நின்றதை தொடர்ந்து அதில் ஊசலாடிக் கொண்டிருந்த 24 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்காவில் ஒரு தீம் பார்க்கில் ரோலர் கோஸ்டர் பழுதடைந்து 100 அடி உயரத்தில் நின்றது. அதில் பயணித்தவர்கள் அந்தரத்தில் தொங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் அனைவரையும் பாதுகாப்பாக மீட்டனர்.

அமெரிக்காவின் வாஷிங்டன் அருகே லார்கோவில் உள்ள தீம் பார்க் ஒன்றில் ரோலர் கோஸ்டரில் சிலர் பயணம் செய்தனர். 24 பேருடன் சென்ற 6 பெட்டிகள் 100 அடி உயரத்தில் சென்றபோது திடீரென பழுதாகியது. இதையடுத்து தீம் பார்க் ஊழியர்கள் ரோலர் கோஸ்டரை மீண்டும் இயக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டும் எதுவும் முடியவில்லை.

A roller coaster trapped in 100 feet height: 24 were rescued

இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடம் விரைந்த தீயணைப்பு படையினர் ராட்சத ஏணியை பயன்படுத்தி சுமார் 4 மணி நேரம் போராடி அந்த 24 பேரையும் பத்திரமாக மீட்டனர்.

ரோலர் கோஸ்டர் பழுதானால் 100 அடி உயரத்தில் தொங்கிக் கொண்டிருந்த 24 பயணிகளும் நிம்மதி பெருமூச்சு விட்டனர். அந்தரத்தில் ஊசலாடிய உயிரை தீயணைப்பு வீரர்கள்தான் மீட்டுக்கொடுத்தனர்.

English summary
24 were ridden in roller coaster in America's theme park. It was struck in 100 feet height. Rescue team rescued the 24 safely.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X