For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமெரிக்காவில் மீண்டும் ஒரு இனவெறி சம்பவம்.. லெபனானுக்கு திரும்பிப்போ என சீக்கிய பெண்ணிடம் மிரட்டல்

லெபனானுக்கு திரும்பிப் போ என சீக்கிய பெண்ணை அமெரிக்கர் ஒருவர் ஓடம் ரயிலில் திட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Google Oneindia Tamil News

நியூயார்க்: லெபனானுக்கு திரும்பிப் போ என சீக்கிய பெண்ணை அமெரிக்கர் ஒருவர் ஓடம் ரயிலில் திட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இந்தியர்கள் இந்தியர்கள் உட்பட வெளி நாட்டினர் கொல்லப்பட்டு வரும் நிலையில் சீக்கிய பெண் ஒருவர் மிரட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் அதிபராக டிரம்ப் பதவியேற்ற நாள் முதல் இனவெறி சம்பவங்கள் அங்கு அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் ராஜ்பிரீத் ஹெயர் என்ற சீக்கிய அமெரிக்க பெண் நியூயார்க் மெட்ரோ ரயிலில் அமெரிக்கர் ஒருவரால் லெபனான் நாட்டுக்கு திரும்பிப்போ என மிரட்டியுள்ளார்.

ராஜ்பிரீத் ஹெயர் என்ற பெண் தனது நண்பரின் பிறந்த நாள் விழாவுக்காக நியூயார்க் சுரங்கப்பாதை ரயிலில் சென்றுள்ளார். அப்போது அந்த ரயிலில் பயணித்த அமெரிக்கர் ஒருவர், "அமெரிக்க ராணுவ வீரர்கள் எப்படி இருப்பார்கள் தெரியுமா உனக்கு? இந்த நாட்டுக்கு அவர்கள் செய்த அர்ப்பணிப்புகள் தெரியுமா உனக்கு?" எல்லாம் உன்னை போன்ற ஆட்களால்தான் என கூறியுள்ளார்.

லெபனானுக்கு திரும்பிப்போ

லெபனானுக்கு திரும்பிப்போ

மேலும் தகாத வார்த்தைகளார் திட்டிய அவர் "லெபனானுக்கு திரும்பிப் போ. எந்த வகையிலும் இந்த நாட்டை சேர்ந்தவராக நீ ஆகிவிட முடியாது" என்று கூறிவிட்டு சென்றுள்ளார். இதனை அருகில் இருந்தவர்களும் கவனித்து வந்துள்ளனர்.

இந்த வார இனவெறி

இந்த வார இனவெறி

இந்த செய்தியை அந்நாட்டின் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை இந்த வார இனவெறி என்ற பகுதியில் வெளியிட்டுள்ளது. ட்ரம்ப் பதவியேற்றத்தில் இந்த வாரா இன வெறி என்ற தலைப்பில் இனவெறி சம்பவங்களை நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்டு வருகிறது.

தவறாக புரிந்து கொண்ட அமெரிக்கர்

தவறாக புரிந்து கொண்ட அமெரிக்கர்

இந்த வாரம் ராஜ்பிரீத் ஹெயர் விவகாரம் அந்தப் பகுதியில் இடம் பெற்றுள்ளது. உண்மையில் ராஜ்பிரீத் ஹெயர், அமெரிக்காவின் இண்டியானா மாகாணம் லெபனான் நகரில் பிறந்தவர். அவர் லெபனான் நாட்டை சேர்ந்தவர் என அவரை தவறுதலாக புரிந்து கொண்டு அந்த அமெரிக்கர் திட்டியுள்ளார்.

வெளிநாட்டினரிடையே அதிர்ச்சி

வெளிநாட்டினரிடையே அதிர்ச்சி

இது தொடர்பாக வீடியோ ஆதாரங்களை வெளியிட்டுள்ள ராஜ்பிரீத் ஹெயர், சிறுபான்மையினராக இருப்பவர்கள் இதுபோன்ற அனுபவங்களை சந்திக்க வேண்டியிருக்கிறது எனத் தெரிவித்துள்ளார். வெளிநாட்டினர் மீதான அமெரிக்கர்களின இனவெறித் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த சம்பவம் அமெரிக்காவில் வாழும் வெளி நாட்டினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

English summary
A Sikh-American girl was harassed on a subway train here when a man, mistaking her to be from the Middle East, allegedly shouted "go back to Lebanon.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X