ஓடும் காரில் இருந்து கழன்று உருண்டு ஓடி வந்த டயர்... ஃபார்மஸிக்குள் புகுந்ததில் பீதி!- வீடியோ

துருக்கியில் ஓடும் காரில் இருந்து கழன்டு உருண்டு ஓடி வந்த டயர் ஃபார்மஸிக்குள் புகுந்த வீடியோ வெளியாகியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

அடானா: துருக்கியில் ஓடும் காரில் இருந்து திடீரென கழன்ட டயர் அதி வேகத்தில் உருண்டு வந்து ஃபார்மஸிக்குள் புகுந்தது. இதில் ஃபார்மஸிக்குள் பேசிக்கொண்டிருந்த 2 பேர் லேசான காயம் அடைந்தனர். அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

துருக்கி நாட்டின் அடானா மாகாணத்தில் கார் ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. அப்போது திடிரென காரின் பின்பக்க டயர் கழன்டு காரின் வேகத்தில் சாலையில் உருண்டு வந்தது.

அப்போது சாலை ஓரத்தில் இருந்த ஃபார்மஸிக்குள் புகுந்த அந்த டயர் அங்கே பேசிக்கொண்டிருந்தவர்கள் மீது விழுந்தது. இதனை சற்றும் எதிர்பாராத அவர்கள் பெரும் பீதியில் சிதறியோடினர்.

இந்தக் காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த பல்வேறு சிசிடிவி கேரமராக்களில் பதிவாகியுள்ளது. தற்போது அந்த வீடியோ காட்சிகள் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

English summary
A tyre fell off a moving vehicle in Turkey, bounced into a pharmacy and hit two people. The incident took place in Turkey's Adana province last Friday.
Please Wait while comments are loading...