For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நேஷனல் ஜியோகிராபிக் அட்டைப்பட புகழ் பச்சைக் கண் 'ஆப்கான் பெண்' பாக்.,கில் கைது!

நேஷனல் ஜியோகிராபிக் பத்திரிக்கையின் அட்டைப்படத்தில் இடம்பெற்று உலக அளவில் பிரபலமான 'ஆப்கன் பெண்' பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ளார்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்: பச்சைக்கண்களை உடைய நேஷனல் ஜியோகிராபிக் பத்திரிக்கையின் அட்டைப்படத்தில் இடம்பெற்று உலக அளவில் பிரபலமான 'ஆப்கன் பெண்' பாகிஸ்தானில் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் போலி அடையாள அட்டைகளுடன் தங்கியுள்ளவர்களை கண்டுபிடித்து சொந்த நாட்டிற்கு அனுப்பி வருகின்றனர்.

கடந்த 1979ம் ஆண்டு சோவியத் ரஷ்யா ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்தபோது அங்கிருந்து லட்சக்கணக்கான ஆப்கானிஸ்தான் மக்கள் அகதிகளாக பாகிஸ்தானில் தஞ்சம் அடைந்தனர். ஆப்கானிஸ்தான் அகதிகள் குறித்து 1984ம் ஆண்டு பத்திரிக்கையானது ஒரு விரிவான செய்தியாக வெளியிட முடிவு செய்தது. அப்போது இதழின் பிரபல புகைப்படக் கலைஞரான மக்குர்ரே என்பவர் 14வயதான ஷர்பாத் குலாவின் சோகம் நிறைந்த கண்களுடனான புகைப்படத்தை படம்பிடித்து அதனை 1985ம் ஆண்டு ஜூன் மாத இதழில் அட்டைப்படமாக வெளியிட்டார்.

பச்சை நிற கண்கள்

பச்சை நிற கண்கள்

கடலின் பச்சை நிற கண்கள், அழகும் சோகமும் நிறைந்த முகம், கிழிசல்களோடு துப்பட்டா முகத்தை மேலோட்டமாக போர்த்திய நிலையில் கேமராவை நேருக்கு நேராய் பார்த்து நின்ற அந்த சிறுமியின் புகைப்படம் பார்ப்பவரை ஒரு கணம் ஸ்தம்பிக்க வைப்பதாய் இருந்தது. உலகம் முழுவதும் புகைப்படம் பிரபலமாக தொடங்கியது. வல்லரசுகளாலும் உள்நாடு அரசியல்வாதிகளாலும் வன்முறையும் போரும் நிறைந்த ஆப்கன் நாட்டை விட்டு ஓடி வரும் அகதிகளின் நிலையை பிரதிபலிப்பதாய் இருந்தது அந்தப் புகைப்படம்.

அகதிகளின் அவலம்

அகதிகளின் அவலம்

உலகத்தின் அத்தனை அகதிகளின் அவலத்தை உணர்த்தும் படமாக அது மாறிப்போனது. நீங்கள் புகைப்படத்தை பார்த்து கொண்டிருந்தால் அது எத்தனையோ விஷயங்களை உணர்த்துவதாய் இருந்தது. அதன் பிறகு, ஷர்பாத் குலா உலக அளவில் பிரபலமானர். ஆனாலும் அந்த புகைப்படத்தை எடுத்த மக்குர்ரே அவரை மீண்டும் சந்திக்க முடியாமல் போனது. வெளிவந்த புகைப்படங்களிலே அதிக மக்கள் இன்னும் நினைவு வைத்திருக்கும் புகைப்படம் இது தான், என நேஷனல் ஜியோகிராபிக் இதழ் அறிவித்தது.

ஆப்கன் சிறுமி

ஆப்கன் சிறுமி

டாவின்ஸியின் மோனாலிசா ஓவியத்தோடு இதை ஒப்பிடுபவர்களும் உண்டு. பொதுவாக உலகம் முழுக்க ‘ஆப்கன் சிறுமி' என்கிற பெயரில் இந்த புகைப்படம் இன்றும் பிரபலமாக இருக்கிறது. ஆமனஸ்டி போன்ற சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இந்த புகைப்படத்தை தங்களுடைய பல பிரச்சார போஸ்டர்களில் பயன்படுத்தின. பல வீட்டு சுவர்களை, அலுவலக சுவர்களை இந்த புகைப்படம் அலங்கரிக்கிறது.

பாகிஸ்தானில் கைது

பாகிஸ்தானில் கைது

அதன் பிறகு 2002ம் மீண்டும் மக்குர்ரே அவரை சந்திக்க மீண்டும் வாய்ப்புகிடைத்தது, அந்த சந்திப்பில் ஷர்பாத் அவரிடம் பேட்டியும் எடுத்தார். அப்போது குலாவுக்கு திருமணமாகி, மூன்று குழந்தைகளுக்கு தாயாக இருந்தார். இதன் பிறகு ஷர்பாத் பாகிஸ்தானில் நிரந்தரமாக குடியேறிவிட்டார். ஆனால் ஷர்பாத் குலா சட்டத்திற்கு புறம்பாக பாகிஸ்தான் அரசாங்கத்தை ஏமாற்றிதான் பாகிஸ்தான் குடியுரிமையை பெற்றிருப்பதாக கூறி அவரை பாகிஸ்தான் அரசு கைது செய்துள்ளது.

போலி அடையாள அட்டை

போலி அடையாள அட்டை

பாகிஸ்தானில் போலி அடையாள அட்டைகளுடன் தங்கியுள்ளவர்களை கண்டுபிடிக்கும் நடவடிக்கை தீவிரமடைந்தது. அதில், குலா, போலியான பெயரில், பாகிஸ்தானின் பெஷாவர் மாகாணத்தில் தங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வந்த விசாரணையின் முடிவில், குலா கைது செய்யப்பட்டுள்ளார்

சட்டத்திற்கு புறம்பான குடியேற்றம்

சட்டத்திற்கு புறம்பான குடியேற்றம்

ஷர்பாத் மட்டுமல்லாது, ஆப்கானிஸ்தானிலிருந்து லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக பாகிஸ்தானில் குடியேறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது இந்த அகதிகளையெல்லாம் பாகிஸ்தான் அரசு தற்போது அவர்களின் நாட்டைவிட்டு வெளியேற்றிவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதில் ஒரு பகுதியாக அவர்களின் குடியேற்றங்களுக்கான உரிமைகளையும் அடையாள அட்டைகளையும் ஆய்வு செய்துவருகிறது. இதில் ஆயிரக்கணக்கான அகதிகள் சட்டத்திற்கு புறம்பாக பாகிஸ்தான் அரசை ஏமாற்றி குடியுரிமையை பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறை தண்டனை

சிறை தண்டனை

ஷர்பாத் குலாவும் சட்டத்திற்கு புறம்பாகவே பாகிஸ்தானில் வசித்துவருவதாக கூறி அவரை பாகிஸ்தான் அரசு கைது செய்துள்ளது. இந்த குற்றசாட்டு நிரூபிக்கப்பட்டால் ஷர்பாத் குலாவிற்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக பாகிஸ்தானிய சட்ட வல்லுநர் ஒருவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

English summary
Pakistani police arrested Sharbat Gula, now married and in her forties, at her home in Peshawar on Tuesday, just a few miles from the border camp where the famous National Geographic cover image was taken in 1984.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X