For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உலகின் மிகப்பெரிய விமானம் வெற்றிகரமாக பறந்தது

By Veera Kumar
Google Oneindia Tamil News

லண்டன்: உலகின் மிகப்பெரிய விமானம் பறந்து சோதித்து பார்க்கப்பட்டுள்ளது.

ஹைபிரிட் ஏர் வெகில்ஸ் என்ம் நிறுவனம் 35.6 மில்லியன் டாலர் செலவில் ஏர்லேண்டர்-10 (Airlander ) எனற விமானத்தை உருவாக்கியது. இந்த விமானம் 302 அடி நீளமும், 143 அடி அகலமும், 85 அடி உயரமும் கொண்டது.

விமானம், ஹெலிகாப்டர் மற்றும் விண்கலம் என மூன்றையும் கலந்து செய்த கலவையே இந்த விமானம். பெட்போர்டுசையரில் உள்ள கேர்டிங்டான் விமானத்தளத்திலிருந்து முதல் பயணத்தை தொடங்கியது.

உலகின் பெரிய விமானம் வானில் பறப்பதை காண, புகைப்படக்காரர்களும், மக்களும் விமான தளத்தில் குவிந்தனர். மேலும் கைதட்டி ஆரவாரம் செய்து முதல் பயணத்தை ஊக்குவித்தனர்.

இங்கிலாந்து நிறுவனம் மேற்கொண்ட பல சீரமைப்பிற்கு பின்னர், வெற்றிகரமாக வானில் பறந்த ஏர்லேண்டர் 10, தனது முதல் பயணத்தை வெற்றிகரமாக முடித்துள்ளது.

English summary
The world's largest aircraft has taken off on its maiden flight.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X