For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விமானத்தின் முன் பக்க கண்ணாடியில் ஏற்பட்ட விரிசல் தான் ஜெர்மன்விங்ஸ் விமான விபத்திற்கு காரணமா?

By Siva
Google Oneindia Tamil News

பாரீஸ்: ஜெர்மன்விங்ஸ் விமானத்தின் முன்பக்க கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டது தான் அது விபத்துக்குள்ளாக காரணமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

ஸ்பெயினில் உள்ள பார்சிலோனா நகரில் இருந்து ஜெர்மனியின் டுசல்டார்ப் நகருக்கு 150 பேருடன் சென்ற ஜெர்மன்விங்ஸ் விமானம் பிரான்ஸ் நாட்டின் ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் இருந்த 7 மாத குழந்தை, 16 பள்ளிக் குழந்தைகள், 2 ஆசிரியர்கள், 2 பாடகர்கள் என அனைவரும் பலியாகினர்.

இந்நிலையில் மீட்கப்ட்ட விமானத்தின் கருப்புப் பெட்டியில் இருந்து பயனுள்ள தகவல் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

வழக்கம்

வழக்கம்

வழக்கம் என்பது தான் ஜெர்மன்விங்ஸ் விமானத்தில் இருந்து கடைசியாக வந்த தகவல் ஆகும். விமானத்தின் 2வது கருப்புப் பெட்டியை தேடும் பணி நடந்து வருகிறது.

வின்ட்ஸ்க்ரீன்

வின்ட்ஸ்க்ரீன்

விமானத்தின் முன்பக்க கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டிருக்கக்கூடும். அதனால் தான் விமானத்தின் வேகம் வெகுவாகக் குறைந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. கேபின் பிரஷர் குறைந்திருக்கும். அதனால் தான் விமானிகளால் அபய குரல் எழுப்ப முடியவில்லை என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

வெடிக்கவில்லை

வெடிக்கவில்லை

விமானம் வெடித்துச் சிதறவில்லை. மாறாக இறுதி வரை பறந்து மலையில் மோதி விழுந்துள்ளது.

காரணம்

காரணம்

விமானம் இதனால் தான் விபத்துக்குள்ளானது என்று தற்போதே ஒரு முடிவுக்கு வந்துவிட முடியாது. விமானம் ஏன் கடைசி நிமிடங்களில் அவ்வளவு வேகத்தை இழந்தது, அதன் ரேடியோக்கள் ஏன் வேலை செய்யவில்லை என்று இன்னும் தெரியவில்லை என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

English summary
According to experts, cracked windscreen could have been the reason for the crash of the Germanwings plane.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X