For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சீன புத்த துறவிகள் மடாலயத்தில் ”பொன்னிற இலைகள்” தூவும் கிங்கோ மரம்!

Google Oneindia Tamil News

பீஜிங்: சீனாவின் ஷோன்ங்னான் மலைப்பகுதியில் உள்ள புத்த துறவிகளின் மடாலயத்தில் இருக்கும் கிங்கோ மரம் சுமார் ஆயிரத்து நானூறு ஆண்டுகளாக நவம்பர் மாதங்களில் தங்க நிற இலைகளைத் தூவுவதை வாடிக்கையாக வைத்துள்ளது.

சுமார் 200 மில்லியன் ஆண்டுகளாக இந்த மரத்தின் இனம் மாறாமல், அழியாமல் இருந்துவருவதால், இவை வாழும் படிமங்கள் எனவும் இப்பகுதி மக்களால் அழைக்கப்படுகின்றன.

கிங்கோ பிலோபா மரங்கள் சியோல் நகரின் மாசு மற்றும் தூசுகளை கட்டுபடுத்துவது மட்டுமல்லாமல் கோடைகாலங்களில் பசுங்குடையாகவும் பயன்படுகின்றன.

மருத்துவப் பயன்பாடு:

மருத்துவப் பயன்பாடு:

இந்த மரங்கள் பாரம்பரிய சீன, ஜப்பான் மற்றும் கொரிய உணவு மற்றும் மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகிறது.

புத்த சாதுக்களின் உணவு:

புத்த சாதுக்களின் உணவு:

சீன புத்தசாதுகள் உண்ணும் "Buddha's Delight" என அழைக்கப்படும் பாரம்பரிய உணவில் சேர்க்கும் 18 மூலப்பொருள்களில் கிங்கோ பிலோபா பழத்தின் கொட்டைகளும் ஒன்று.

பீனிக்ஸ் பறவையாய் எழும் மரம்:

பீனிக்ஸ் பறவையாய் எழும் மரம்:

இயற்கை சீற்றத்தால் பலமுறை பாதிக்கப்பட்டாலும் பீனிக்ஸ் பறவையைபோல் எழுந்துவரும் ஜப்பானியர்களின் நம்பிக்கை சின்னமாக கிங்கோ பிலோபா மரங்கள் உள்ளன.

பூச்சிகள் அண்டாது:

பூச்சிகள் அண்டாது:

கிங்கோ பழத்தில் உள்ள கிங்கோலிக் அமிலத்தின் காரணமாக பூச்சிகள் இந்த பழத்தையோ, மரத்தையோ அண்டாது. இந்நிலையில் சீனாவில் தங்க நிற இலைகளை உதிர்க்கும் இம்மரத்தினை காண சீனர்கள் மற்றும் வெளிநாட்டை சேர்ந்த பலரும் இப்பகுதிக்கு அதிக அளவில் வருகை புரிகின்றனர்.

English summary
This towering ginkgo tree is located within the walls of the Gu Guanyin Buddhist Temple in the Zhongnan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X