For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

துபாயின் 'ஹை ரைஸ்' கட்டடங்களைப் பறந்து பறந்து படம் பிடித்த "ஈகிள்ஸ் ஐ"...!

Google Oneindia Tamil News

துபாய்: முதுகில் காமெராவை கட்டிக்கொண்டு பறந்த கழுகு ஒன்று வானத்திலிருந்து துபாய் நகர அழகை பிரமிப்புடன் படம் பிடித்து உலக சாதனையை நிகழ்த்தியுள்ளது.

கழுகுகளை பாதுகாப்பது குறித்து ப்ரீடம் கன்சர்வேசன் (Freedom Conservation ) என்ற அமைப்பை சேர்ந்த ஜாக்கூஷ்-ஆலிவர் ட்ராவெர்ஸ் (Jazques-Olivier Travers) என்பவர் ஆண்டுதோறும் கழுகுகளை கொண்டு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.

அதன்படி, இந்தாண்டிற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியை வித்தியாசமாக நடத்தத் திட்டமிட்டார் ஆலிவர்.

தர்ஷன்...

தர்ஷன்...

தர்ஷன் எனப் பெயரிடப்பட்ட, பயிற்சி பெற்ற கழுகின் மேற்புறத்தில் 300 கிராம் எடையுள்ள மினி கேமரா ஒன்றைக் கட்டினார். பின்னர் அக்கழுகை வானத்தில் பறக்க விட்டார்.

பறந்து பறந்து வீடியோ...

பறந்து பறந்து வீடியோ...

கேமராவுடன் வானில் சுமார் 829.8 மீட்டர் உயரத்தில் பறந்த தர்ஷன், அங்கிருந்த படி துபாயின் ரம்மியமான அழகைப் படம் பிடித்தது. இந்த வீடியோவில் துபாயில் அமைந்துள்ள உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிபா மற்றும் இன்னபிற பெரிய கட்டிடங்களும் பதிவாகி உள்ளன.

சமிக்ஞை...

சமிக்ஞை...

கீழிருந்தபடி, கழுகின் உரிமையாளர் காட்டிய சமிக்ஞைகளுக்குத் தக்கவாறு வானில் பறந்து கழுகு வீடியோ எடுத்ததைக் கண்டு பார்வையாளர்கள் வியப்பில் ஆழ்ந்தனர். கழுகுவின் இந்த பயணம் மூலம், பூரிஜ் கட்டிடம் முதல் பல உயரமான கட்டிடங்களை இதுவரை பார்த்திராத புது கோணத்தில் பார்க்க முடிகிறது.

உலக சாதனை...

இந்த நிகழ்ச்சி மூலம் ரக்‌ஷன் கழுகு உலக சாதனைப் படைத்துள்ளது. இது தொடர்பாக ஆலிவர் கூறுகையில், 'ஆபத்தான பறவைகளில் ஒன்றாக கருதப்படும் கழுகு மற்றும் பிற பறவைகளின் இயற்கை பண்புகளையும் அவற்றின் பயன்களையும் மக்களிடம் கொண்டு செல்வதற்காக இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்தி வருவதாக' தெரிவித்தார்.

English summary
The Freedom Conservation teamed up with Darshan the Eagle on Saturday to set a record for the highest recorded bird flight from a man-made structure. Equipped with the very small Sony Action Cam Mini, Darshan took off from the top of Dubai's Burj Khalifa, which, at 2,722 feet, is the tallest building in the world.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X