For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சாதாரண எறும்பு கூட "டாய்லெட்"|டை பயன்படுத்துகிறது பாருங்கள்... ஆய்வில் ஆச்சர்யம்!

Google Oneindia Tamil News

பெர்லின்: எறும்புகள் தங்கள் கூட்டின் ஓரத்தில் கழிப்பறைகளுக்கென்று தனி இடம் ஒதுக்கி வைத்து வாழ்கின்றன என்ற ஆச்சர்யமான விஷயம் புதிய ஆய்வு ஒன்றின் மூலம் தெரிய வந்துள்ளது.

சமயங்களில் மனிதர்களைத் தூக்கி சாப்பிட்டு விடும் வகையில் மற்ற உயிரினங்களின் செயல்கள் அமைந்து விடுவதுண்டு. அந்தவகையில், தம்மாத்தூண்டு எறும்புகள் தங்கள் கூட்டின் ஓரத்தை கழிப்பறையாக பயன்படுத்துவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கழிப்பறை குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் சூழலில், எறும்புகளும் அதனை கடைபிடிப்பது ஆச்சர்யம் அளிப்பதாக அமைந்துள்ளது.

ஜெர்மனி ஆய்வு...

ஜெர்மனி ஆய்வு...

ஜெர்மனி நாட்டில் உள்ள ரெகன்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் டாமர் சேக்ஸ் மற்றும் அவரது சகாக்கள் எறும்புகள் மற்றும் அவற்றின் இருப்பிடம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அவர்களின் ஆய்வு முடிவுகள் ‘ப்ளஸ் ஒன்' எனும் பிரபல அறிவியல் ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளன.

கட்டெறும்புக் கூடுகள்...

கட்டெறும்புக் கூடுகள்...

இந்த ஆய்வுக்காக இதற்காக 21 கட்டெறும்புக் கூடுகள் தேர்வு செய்யப்பட்டன‌. அவற்றில் 150 முதல் 300 கட்டெறும்புகள் வாழ்ந்து வந்தன. இந்த ஆய்வு இரண்டு மாதங்கள் நடைபெற்றது.

கலர் கலராய் கழிவுகள்...

கலர் கலராய் கழிவுகள்...

அந்த எறும்புகளுக்கு சிவப்பு மற்றும் நீல நிற உணவு வகைகள் வழங்கப்பட்டன. பின்னர், எறும்புக் கூடுகளை ஆய்வு செய்தபோது அந்தக் கூடுகளின் ஓரங்களில் என்ன வகையான நிறங்களில் எறும்புகள் உணவு எடுத்துக் கொண்டனவோ, அதே நிறத்தில் அதன் கழிவுகளும் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது.

சேமிக்கவே இல்லையாம்...

சேமிக்கவே இல்லையாம்...

இது எல்லா கூடுகளிலும் காணப்படுகிற ஒரு பொது அம்சமாக இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், அந்தக் கூடுகளில், வீணாக்கப்பட்ட உணவோ அல்லது சேமித்து வைக்கப்பட்ட உணவோ காணப்படவில்லை எனவும் அவர்கள் கூறுகின்றனர்.

வீட்டின் மூலையில்...

வீட்டின் மூலையில்...

தங்களது ஆய்வு தொடர்பாக சேக்ஸ் கூறுகையில், "மனிதர்களைப் போலவே எறும்புகளுக்கும் சுகாதாரமான இருப்பிடம் கிடைப்பதற்குக் கடினமாக உள்ளது. அவை நம்மைப் போலவே வீட்டின் ஒரு மூலையில்தான் கழிவறைகளை கட்டுகின்றன. அதோடு தனது கூடுகளையும் சுத்தமாக வைத்துள்ளன" என்றார்.

எறும்பை பார்த்துக் கத்துக்கணும்...

எறும்பை பார்த்துக் கத்துக்கணும்...

பொது இடங்களில் மல ஜலம் கழிப்போர், சுவரைப் பார்த்ததும் மூச்சா போக ஓடுவோர் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் எறும்புகளிடம் நிறையவே இருக்கிறது.

English summary
Scientists studying black garden ants discovered that the bugs pile their waste in dedicated corners of their nests. This makes sense: With thousands of ants confined to such a small space, organization is key.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X