For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆப்கானிஸ்தான் சுப்ரீம் கோர்ட் அருகே பயங்கர குண்டுவெடிப்பு: 12 பேர் பலி; 10 பேர் படுகாயம்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பயங்கர குண்டுவெடித்ததில் 12 பரிதாபமாக பலியாகினர். 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

By Karthikeyan
Google Oneindia Tamil News

காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள அந்நாட்டு உச்சநீதிமன்றம் அருகே இன்று மாலை பயங்கர குண்டுவெடித்தது. இதில் 12 பேர் பலியாகினர். 10 பேர் படுகாயம் அடைந்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் நகரில் உச்சநீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. இன்று மாலை ஊழியர்கள் வேலை முடிந்து புறப்படத் தயார் ஆகிக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென பயங்கர குண்டுவெடித்தது.

At least 12 killed outside Afghanistan's Supreme Court

கோர்ட் நுழைவு வாயிலின் மற்றொரு பக்கம் நிகழ்ந்த இந்த கொடூர குண்டுவெடிப்பில் 12 பேர் பலியாகியுள்ளதாகவும், 10 பேர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு எந்த ஒரு தீவிரவாத இயக்கமும் பொறுப்பு ஏற்கவில்லை. சம்பவ இடத்துக்கு விரைந்த பாதுகாப்பு படையினர் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

English summary
An explosion occurred near the Supreme Court in the centre of Afghanistan's capital, Kabul, on Tuesday, according to police and witnesses.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X