For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மலேசியக் கடலில் அகதிகள் படகு கவிழ்ந்து 14 பேர் பரிதாப பலி- மீட்புப் பணிகள் தீவிரம்

Google Oneindia Tamil News

கோலாலம்பூர்: மலேசியா கடற்பகுதியில் அகதிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் பலியாகிய சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

போர் காரணமாக மத்திய கிழக்கு, ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்வது அதிகரித்து வருகிறது. அகதிகள் வருகையை கட்டுப்படுத்த முடியாமல் ஐரோப்பிய நாடுகள் திணறி வருகின்றன.

At least 14 killed as boat overloaded with migrants capsizes off Malaysia

இன்று சுமார் 100 இந்தோனேசியர்களை ஏற்றிக் கொண்டு வந்த படகு மலேசியாவின் மேற்கு கடற்கரையின் மலாக்கா நீரிணை பகுதியில் திடீரென கவிழந்து விபத்துக்குள்ளானது. இது குறித்து அப்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்கள் கொடுத்த தகவலை அடுத்து மீட்புக் குழுவினர் சம்பவ பகுதிக்கு விரைந்தனர்.

இந்த சம்பவத்தில் இதுவரை 14 பேர் பலியானதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் 19 பேர் உயிருடன் மீட்கப்படுள்ளனர். மற்றவர்களை மீட்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

English summary
An overloaded wooden boat believed to be carrying dozens of Indonesian illegal immigrants sank off the coast of Malaysia on Thursday, killing at least 14 people, among them 13 women, maritime officials said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X