For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஐ.எஸ். தீவிரவாதிகள் தொடர்பான உளவுத் தகவலை ஈரானுடன் பகிர்ந்துகொள்ள ஆஸி. ஒப்பந்தம்

By Mathi
Google Oneindia Tamil News

சிட்னி: தெஹ்ரான்: ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்க தீவிரவாதிகள் தொடர்பான உளவுத் துறை தகவல்களைப் பகிர்ந்துகொள்ள ஈரானுடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக ஆஸ்திரேலியா வெளியுறவுத் துறை அமைச்சர் ஜூலி பிஷப் அறிவித்துள்ளார்.

ஈராக், சிரியாவின் பல பகுதிகளைக் கைப்பற்றி தனி இஸ்லாமிய நாட்டை அறிவித்துள்ளனர் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்க தீவிரவாதிகள். இந்த தீவிரவாதிகளை ஒடுக்குவதற்கு அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் ஈராக் மற்றும் குர்து மாகாண ராணுவத்தினருக்கு உதவி வருகின்றன.

Australia announces intelligence sharing deal with Iran

இந்நிலையில் ஈரான் சென்றுள்ள ஆஸ்திரேலியா வெளியுறவுத் துறை அமைச்சர் ஜூலி பிஷப், அந்நாட்டு அதிபர் ஹசன் ரொஹானி, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜாவத் ஜரீப், தேசிய பாதுகாப்பு சபை தலைவர் அலி சம்கானி ஆகியோரை சனிக்கிழமையன்று சந்தித்துப் பேசினார். 10 ஆண்டுகளுக்குப் பின்னர் ஈரான் சென்ற முதலாவது ஆஸ்திரேலிய தலைவர் ஜூலி.

Australia announces intelligence sharing deal with Iran

இந்த பயணத்தின் போது, ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் இணைந்துள்ள ஆஸ்திரேலிய நாட்டவர் குறித்த உளவுத்துறை தகவல்களை ஈரானுடன் பகிர்ந்து கொள்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானதாக ஜூலி பிஷப் தெரிவித்துள்ளார்.

English summary
Australian Foreign Minister Julie Bishop on Monday announced an intelligence sharing deal with Iran on the Australians fighting with the Islamic State (IS) terror group in Iraq.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X