For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மண்டையோடும் இல்லை, மூளையில் பாதி இல்லை: மரணத்துடன் போராடும் குழந்தை

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: அமெரிக்காவில் மண்டை ஓடு இல்லாமலும், பாதி மூளையுடனும் பிறந்த குழந்தை உயிர் பிழைத்து பலருக்கும் நம்பிக்கை அளித்து வருகிறது.

அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரான்டன் புவல். அவரது மனைவி பிரிட்டனி புவல். அவர்களின் 13 மாத குழந்தை ஜாக்சன். ஜாக்சன் பிறந்தபோது அவருக்கு மண்டை ஓட்டின் பெரும்பகுதி இல்லை. மேலும் மூளையும் பாதியாகத் தான் இருந்தது.

இந்த குழந்தை உயிர் பிழைப்பது கடினம், சில நாட்கள் தான் உங்களுடன் இருக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர்.

முதலாவது பிறந்தநாள்

முதலாவது பிறந்தநாள்

சில வாரங்கள் தாக்குப்பிடிப்பதே கடினம் என்று இருந்த நிலையில் ஜாக்சன் கடந்த ஆகஸ்ட் மாதம் தனது முதலாவது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

நோய்

நோய்

ஏற்கனவே குறையுடன் பிறந்த ஜாக்சனுக்கு மூளை சம்பந்தமான நோய் ஏற்பட்டிருப்பது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது. மைக்ரோஹைட்ராநென்செபாலி என்ற அந்த நோய்க்கு சிகிச்சை இல்லை என்பது தான் வேதனையான விஷயம்.

ஃபேஸ்புக்

ஃபேஸ்புக்

ஃபேஸ்புக்கில் ஜாக்சனுக்கு ஆதரவாக பக்கம் துவங்கப்பட்டுள்ளது. அதில் பலரும் வாழ்க்கையுடன் போராட்டம் நடத்தும் ஜாக்சனை பாராட்டி வருகிறார்கள்.

Jaxon says "Hello" to Germany to the kids that drew him pictures!!!! You can't see our shocked and happy expressions behind the camera, but we are super proud parents to be able to witness Jaxon speaking yet again!!! Such a brilliant little man!!! #JaxonStrong

Posted by Jaxon Strong on Friday, October 2, 2015

வீடியோ

ஜாக்சனின் தாய் பிரிட்டனி தனது குழந்தையை வீடியோ எடுத்து ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் ஜாக்சன் தனது தாய்க்கு ஹலோ சொல்கிறான். குழந்தை ஹலோ சொல்லும் வீடியோவை பார்ப்பவர்களின் கண்களின் ஓரம் நீர் எட்டிப் பார்க்கிறது.

English summary
A baby boy born without most part of the skull and brain has given hope to people by struggling with life with great strength.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X