For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இது அட்டகாசமான புலி.. அமைதிப் புலி.. வெட்டிச் சாப்பிட்டாலும் கடிக்காத புலி...!

Google Oneindia Tamil News

லண்டன்: இங்கிலாந்தில் உயிருள்ள புலியைப் போன்றே கேக் தயாரித்து அசத்தியுள்ளார் பெண் ஒருவர்.

இங்கிலாந்தின் லெய்செஸ்டர் நகரத்தைச் சேர்ந்தவர் ஸோயி பாக்ஸ் (36). தானே சுயமாக கேக் செய்யக் கற்றுக் கொண்ட ஸோயி, பேஸ்புக்கில் ‘பேக்கர்ஸ் யுனைட் டு ஃபைட்' என்கிற அமைப்பைத் தொடங்கியுள்ளார்.

இந்த அமைப்பின் மூலம், நலிந்துவரும் வன விலங்குகளின் எண்ணிக்கை தொடர்பாக உலக அளவிலான விழிப்புணர்வில் அவர் ஈடுபட்டுள்ளார்.

300 மணி நேர உழைப்பு...

300 மணி நேர உழைப்பு...

இந்நிலையில், உயிருள்ள புலி போன்ற கேக் ஒன்றைத் தயாரித்துள்ளார் ஸோயி. இந்தப் புலியை உருவாக்க ஸோயிக்கு 300 மணி நேரம் தேவைப்பட்டுள்ளது.

சேவ் த டைகர்...

சேவ் த டைகர்...

‘சேவ் த டைகர்' என்ற விழிப்புணர்வுக் கூட்டத்துக்காக இந்த தத்ரூபமான புலி கேக்கை அவர் உருவாக்கியுள்ளார். இந்தப் புலி கேக்கை தைரியமாக சாப்பிடலாம் என்கிறார் ஸோயி.

கேக் திருவிழா...

கேக் திருவிழா...

வரும் நவம்பர் 6-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை பிர்மிங்ஹம் நகரில்உலகளாவிய கேக் திருவிழா நடைபெறுகிறது. அப்போது இந்த அமைப்பின் உள்ளோரின் கேக்குகளும் இடம்பெறும்.

விதவிதமான வடிவமைப்பில்...

விதவிதமான வடிவமைப்பில்...

யானை, பென்குயின், முதலை, சிறுத்தை போன்ற வடிவமைப்பு உள்ள கேக்குகளும் இந்த அமைப்பின் கீழ் உள்ள பெண்களால் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
This life-size tiger cake looks more likely to eat you than to be eaten. It is the handiwork of Zoe Fox, of Countesthorpe, who spent 300 hours in her kitchen creating the life-like creature, which she hopes will help highlight the plight of endangered animals.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X