For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வீணாக கொட்டப்படும் உணவுகளை உரமாக்கி ‘மேஜிக்’ செய்யும் பிரேசில் மாஜி பத்திரிகையாளர்

Google Oneindia Tamil News

சாவோ பாலோ, பிரேசில்: பிரேசில் நாட்டில் ஒரு முன்னாள் பெண் பத்திரிகையாளர் வீணாக கொட்டப்படும் உணவுப் பொருட்களை சேகரித்து அதை ரீசைக்கிள் செய்து உரமாக்கி அசத்தி வருகிறார்.

சாவோ பாலோ நகரில்தான் இந்த சாதனையை அவர் செய்து வருகிறார். பிரேசிலின் மிகப் பெரிய நகரமான சாவோ பாலோ ஒரு கான்க்ரீட் காடாகும். இங்கு பெருமளவிலான உணவுப் பொருட்கள் வீணாக தெருக்களில் உள்ள குப்பைத் தொட்டிகளில் கொட்டப்படுவதை சகஜமாக காணலாம்.

இதைத்தான் தற்போது சரி செய்து வருகிறார் 43 வயதான பெர்னான்டா டெனிலான் என்ற அந்த முன்னாள் பத்திரிகையாளர்.

உரமாகும் உணவுகள்...

உரமாகும் உணவுகள்...

2 வருடங்களுக்கு முன்பு தனது வேலையை விட்டு விட்ட டெனிலான் அன்று முதல் இந்த உணவுப் பொருட்களை சேகரித்து அதை ரீசைக்கிள் செய்து உரமாக மாற்றும் பணியில் மும்முரமாக இறங்கி விட்டார். உணவகங்களுக்குச் சென்று அங்கு வீணாகும் உணவுப் பொருட்களை சேகரிக்கிறார். இதுதவிர அந்த ஹோட்டல்களின் வளாகததில் தோட்டம் அமைத்து அந்த வீணாகும் உணவுப் பொருட்களை வைத்து உரம் தயாரித்து அதை அதில் பயன்படுத்தவும் அவர் உதவுகிறார்.

குப்பைகள்...

குப்பைகள்...

லத்தீன் அமெரிக்க நாடுகளிலேயே மிகப் பெரிய நாடு, பொருளாதார சக்தி பிரேசில்தான். இங்கு வருடம்தோறும் கிட்டத்தட்ட 7.5 கோடி டன் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதில் பெரும்பாலானவை வீணாகும் உணவுப் பொருட்கள்தான். இவற்றை நகராட்சி நிர்வாகங்கள் சேகரித்து உரமாக்கும் வேலையில் ஈடுபடுவதில்லை. மேலும் இவை குப்பைகளாக குவிந்தும் உள்ளன.

தோட்டங்களுக்கு உரம்...

தோட்டங்களுக்கு உரம்...

இந்த நிலையில்தான் அரசு செய்யாததை தானே செய்யலாம் என்று களத்தில் குதித்து விட்டார் டெனிலான். இவர் வீணாகும் உணவுப் பொருட்களை சேகரித்து அதை உரமாக்கி அந்த உணவுப் பொருட்களைப் பெற்ற உணவகங்களிடேமே கொடுக்கிறார். அதை வைத்து அவர்கள் போடும் தோட்டங்களில் பயன்படுத்த உதவுகிறார்.

இலவசமாகவும்...

இலவசமாகவும்...

வீடு வீடாக போயும், ஹோட்டல்களைத் தேடிப் போயும் வீணாகும் உணவுப் பொருட்களை டெனிலானின் குழுவினர் பெறுகிறார்கள். பின்னர் அவற்றை கொண்டு வந்து உரமாக்கி மீண்டும் ஹோட்டல்களிலேயே கொடுக்கிறாரக்ள். மக்களுக்கும் இதை இலவசமாக தருகிறார்கள்.

40 டன் குப்பைகள்...

40 டன் குப்பைகள்...

முதலில் ஒரே ஒரு உணவகத்திடம்தான் குப்பைகளைப் பெற்றனர். ஆனால், தற்போது 17 ஹோட்டல்கள் இவர்களிடம் வாடிக்கையார்களாக உள்ளனர். மேலும் 10 ஹோட்டல்களிடமும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். தற்போது தனது நகரில் மாதத்திற்கு 30 முதல் 40 டன் குப்பைகளை இவரது குழுவினர் உரமாக்கித் தருகின்றனராம்.

English summary
Thanks to Fernanda Danelon, restaurants in the Brazilian mega-city are turning their waste back into food at innovative gardens tucked amid the skyscrapers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X