For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அண்டார்டிகாவில் திருமணம் செய்துக்கொண்ட முதல் ஜோடி

By BBC News தமிழ்
|

துருவப்பகுதியில் வழிகாட்டிகளாக பணிபுரியும் ஒரு ஜோடி, பிரிட்டனின் ஆர்டிக் பிரதேசத்தில் திருமணம் செய்துக் கொண்டார்கள். அங்கு திருமணம் செய்துக்கொள்ளும் முதல் தம்பதிகள் இவர்களே.

டாம் சில்வெஸ்டர்-ஜூலி பாம் ஜோடி, அண்டார்டிக்கின் மேற்குப்பகுதியில் இருக்கும் அடிலேட் தீவில் உள்ள ராந்தேரா ஆராய்ச்சி நிலையத்தில் திருமணம் செய்துக் கொண்டார்கள்.

மணப்பெண் ஜூலி அணிந்திருந்த ஆரஞ்சு வண்ண உடை, பழைய டெண்ட் துணியில் இருந்து தைக்கப்பட்டது. திருமணம் நடந்தபோது, அங்கு மைனஸ் ஒன்பது டிகிரி தட்பவெட்பம் நிலவியது.

"அண்டார்டிக் மிகவும் அழகான இடம். இங்கு நாங்கள் நிறைய நண்பர்களைப் பெற்றோம். திருமணம் செய்துக் கொள்வதற்கு இதைவிட வேறு சிறந்த இடம் எதுவும் எங்களுக்கு தெரிவியவில்லை" என்று சில்வெஸ்டர் கூறுகிறார்.

"எளிமையாக திருமணம் செய்துக்கொள்ளத்தான் நாங்கள் விரும்பினோம். ஆனால், இந்த உலகிலேயே தனித்து இருக்கக்கூடிய இடத்தில் திருமணம் செய்துகொள்வோம் என்று கற்பனைக்கூட செய்து பார்க்கவில்லை" என்று கூறி மகிழ்கிறார் சில்வெஸ்டர்.

"கடந்த பத்து ஆண்டுகளாக நாங்கள் இருவரும் சக ஊழியர்களாக உலகம் முழுவதும் சுற்றியிருக்கிறோம். ஆனால், அண்டார்டிக்கில் திருமணம் செய்துக் கொள்வது பிரமிப்பாக இருக்கிறது"

திருமணத்திற்கான மோதிரத்தை ஆராய்ச்சி நிலையத்தில் இருக்கும் இயந்திரத்திலேயே பித்தளையில் செய்திருக்கிறார் சில்வெஸ்டர். ஆராய்ச்சி நிலையத் தலைவர் மற்றும் பிரிட்டனின் ஆர்டிக் பிரதேச மேஜிஸ்ட்ரேட் பால் சைம்வெஜ் தலைமையில் திருமணம் நடைபெற்றது.

அண்டார்டிக் பகுதியில் அமைந்திருக்கும் ஆராய்ச்சி நிலையத்தை குளிர்காலங்களில் பராமரிக்கும் குழுவைச் சேர்ந்த 20 பணியாளர்களே திருமணத்திற்கு வருகை தந்த விருந்தினர்கள்.

11 ஆண்டுகளுக்கு முன் வேல்ஸில் சந்தித்துக் கொண்ட ஜூலிக்கும் சில்வெஸ்டருக்கும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பே திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

இந்த மணமக்கள், அனுபவமிக்க மலையேறிகள். 2016இல் பிரிட்டனின் அண்டார்டிக் சர்வே குழுவில் பணிபுரிவதற்காக இருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆழமான பகுதிகளில் மேற்கொள்ளப்படும் அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு உதவுவதே இந்தக் குழுவின் பணி.

சில்வெஸ்டர் ஷெஃபீல்டில் வசிப்பவர். ஜீலி பர்மிங்காமில் பிறந்தவர். தற்போது ஸ்டைஃப்ர்ட்ஷரின், யாக்சால் நகரவாசி.

பிரிட்டனின் ஆர்டிக் பிரதேசத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள இவர்களின் திருமணம் பிரிட்டனிலும் செல்லுபடியாகக்கூடியது.

தற்போது பிரிட்டனின் ஆர்டிக் பிரதேசத்தில் திருமணத்திற்கான சட்ட விதிகள் மாற்றப்பட்டுள்ளது. அதன்பிறகு இங்கு நடைபெறும் முதல் திருமணம் இதுவே.

பி்ற செய்திகள்:

BBC Tamil
English summary
Two polar guides have become the first couple to be officially married in British Antarctic Territory (BAT).
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X