For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தப் பக்கிகளுக்கு விளம்பரம் செய்ய இடமா கிடைக்கல....!

Google Oneindia Tamil News

மாஸ்கோ: அண்ணே.. ஒரு விளம்பரம் என்று கவுண்டமணியிடம் வளைந்து நெளிந்து குழைந்து சொல்வார் செந்தில்.. என்னடா விளம்பரம் என்று அலுத்துக் கொள்வார் கவுண்டர். இந்த விளம்பரத்தைப் பார்த்தாலும் அப்படித்தான் அயர்ச்சி வருகிறது.... காரணம் அந்த விளம்பரங்கள் இடம் பெற்றுள்ள 'இடம்'!

மாஸ்கோவைச் சேர்ந்த ஒரு விளம்பர இணையதளம், வித்தியாசமான விளம்பர ஸ்டைலை அறிமுகப்படுத்தியுள்ளது. விளம்பரதாரர்கள் தங்களது பொருட்கள் குறித்த விளம்பரத்தை பெண்களின் மார்புகளின் மீது எழுதி, வரைந்து இடம் பெறச் செய்கிறது இந்த நிறுவனம்.

Burger King Advertises On Russia’s ‘Tittygram’

டிட்டிகிராம் என்பது இந்த விளம்பர நிறுவனத்தின் பெயராகும். இந்த நிறுவனத்தின் தளத்தில் பலரும் இதுபோல கவர்ச்சிகரமான விளம்பரங்களைக் கொடுத்துள்ளனர். அமெரி்க்காவைச் சேர்ந்த பர்கர் கிங் நிறுவனமும் இதில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மாடல் அழகியின் மார்பு விளம்பரத்திற்கான கட்டணம் 10 டாலராகும். மொத்தம் 35 வார்த்தைகள் இந்த விளம்பரத்தில் இடம் பெற முடியும். நெஞ்சுப் பகுதியில் கையால் எழுதி அதை விளம்பரப்படுத்துவார்கள். விளம்பரத்துடன் காணப்படும் மாடல் அழகி வெற்று மார்புடன் இருக்க மாட்டார். மாறாக பிராவுடன் காணப்படுவார்.

கடந்த மார்ச்சில் இந்த நூதன விளம்பர உத்தியை அறிமுகப்படுத்தியது டிட்டிகிராம். முதல் ஆளாக அதில் இணைந்து விளம்பரம் செய்தது பர்கர் கிங். இதையடுத்து ஏப்ரல் 7ம் தேதி ரஷ்ய பர்கர் கிங் நிறுவனம் ஐ லவ் பர்கர் கிங் என்ற வாசகத்துடன் கூடிய விளம்பரத்தை செய்தது.

இதுகுறித்து டிட்டிகிராம் சிஇஓ விலாடிமிர் கிரிட்சென்கோ கூறுகையில், விளம்பர வருவாயில் 2 சதவீதத்தை மார்பகப் புற்றுநோய் ஆய்வுக்காக தருகிறோம் என்றார்.

இந்த இணையதளத்தின் விளம்பர மாடலாக இருக்க யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். மாடல் அழகியாக இருக்க விரும்புவோருக்கு 21 வயதுக்கு மேல் இருந்தால் போதும். தங்களது "மார்பளவு" புகைப்படத்தை அனுப்பி விண்ணப்பிக்கலாமாம். இந்த மாடல் அழகிகளுக்கு ஒரு நாளைக்கு 88 டாலர் சம்பளமாக கிடைக்குமாம். அதேசமயம், அவர்களின் மார்பு அளவுக்கேற்ப கட்டணும் கூடக் குறைய இருக்குமாம்.

English summary
Tittygram is a new site in Russia where companies or individuals can advertise by having their messages written on a woman’s chest. According to BuzzFeed News, Burger King is the only known American company that has advertised on Tittygram so far. Tittygram’s clients pay $9.95 to have a model pose with a custom message of no more than 35 characters written on her chest. She does wear a bra while the message is being displayed.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X