For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

செத்துப் போன புத்தரின் “அமைதி”- மியான்மரில் வதைபடும் முஸ்லிம் மக்கள்!

Google Oneindia Tamil News

ரங்கூன்: புத்த இனவாத குழுக்களுக்கு அஞ்சி மியான்மரிலிருந்து ஆயிரக்கணக்கான முஸ்லிம் மக்கள் கடல் வழியாக படகுகளில்வெளியேறி வருகின்றனர்.

இவர்களுக்கு அண்டை நாடுகள் அடைக்கலம் கொடுக்க மறுப்பதால் பலர் நடுக்கடலில் உண்ண உணவின்றி படகிலேயே உயிரழக்கின்றனர்.

மியன்மாரில் 5 மில்லியன் முஸ்லிம்கள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

மூன்று வகை முஸ்லிம்கள்:

மூன்று வகை முஸ்லிம்கள்:

அங்கு பிரதானமாக மூன்று வகையாக‌ முஸ்லிம்கள் இருக்கின்றார்கள் .01) பான்தாய்கள் - பர்மிய பூர்வீகக் குடிகள், பஷுஷ் - சீனா , தாய்லாந்து பூர்வீகத்தினர், ரோஹிங்கியா - இந்தியா,பங்களா தேஷ் பூர்வீகத்தினர் என அறியப்படுகிறது.

இனவாதச் செயல்கள் அதிகரிப்பு:

இனவாதச் செயல்கள் அதிகரிப்பு:

இதில் ரோஹிங்கியா முஸ்லிம் இனத்தைச் சேர்ந்தவர்கள் பங்காளி இனத்தவர்கள் எனவும் அவர்கள் மியன்மார் இனத்தவர்கள் அல்ல என்ற கருத்து மியான்மரில் 1956 இல் பரவ ஆரம்பித்து இதன் விளைவாக நாடு முழுவதும் முஸ்லீம்களுக்கெதிரான இனவாதச் செயல்கள் ஆரம்பித்தது.

வங்காளத்திற்கு இடம்பெயர்வு:

வங்காளத்திற்கு இடம்பெயர்வு:

1990 களில் முஸ்லிம் மீதான தாக்குதல்கள் தீவிரமடைந்தது. இதனால் 268.000 பேர் பங்களாதேஷுக்கு இடம்பெயர்ந்தனர். அதேபோல் 1996 இல் ஏராளமான பள்ளிவாசல்கள் இடித்துத் தரமட்டமாகக்கப்பட்டது.

சர்வாதிகார ஆட்சியில் மியான்மர்:

சர்வாதிகார ஆட்சியில் மியான்மர்:

கடந்த 2011 ஆம் ஆண்டில் சர்வாதிகார ஆட்சியில் இருந்து ஜனநாயக ஆட்சியமைப்புக்கு மாறியபோது மீண்டும் மியான்மரில் இனக்கலவரங்கள் தொடங்கின.

பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள்:

பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள்:

அங்கு வாழ்ந்துவந்த ரோஹிங்கியா முஸ்லிம் சிறுபான்மையினர் இந்த வன்முறைகளில் பெரும்பான்மையாகப் பாதிக்கப்பட்டார்கள். 280 பேருக்குமேல்

புத்த பிக்குகள் துணையுடன்:

புத்த பிக்குகள் துணையுடன்:

வன்முறை சம்பவங்களைத் தொடர்ந்து 1,40,000 க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் இடங்களை விட்டு வெளியேறியுள்ளனர். இனவாத புத்த பிக்குகள் தலைமையில் இந்த தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. அன்றிலிருந்து இன்று வரை ரோஹிங்கியா மக்களின் நிலை அங்கு படுமோசமாக உள்ளது.

நாட்டை விட்டு வெளியேற்றம்:

நாட்டை விட்டு வெளியேற்றம்:

இன்று ரோஹிங்கியா முஸ்லிம்கள் பலவந்தமாக நாட்டைவிட்டு வெளியேற்றும் சூழ்நிலை உள்ளதால் சிறு படகுகளில் புளி மூட்டை போன்று அடைக்கப்பட்டு அங்கிருந்து புறப்பட்டு வருகின்றனர்.

தத்தளிக்கும் மக்கள்:

தத்தளிக்கும் மக்கள்:

அண்டை நாடுகள் அடைக்கலம் தர மறுப்பதால் சிறு பிள்ளைகள், கர்ப்பிணி பெண்கள் வயோதிகர்கள், கடலில் தத்தளித்துக் கொண்டு உயிழக்கும் நிலையும் ஏற்படுகிறது.

பரிதவிக்கும் அகதிகள்:

பரிதவிக்கும் அகதிகள்:

சமீபத்தில் படகுகளில் நாட்டை விட்டு தப்பி வந்த நூற்றுக்கணக்கானோரை அண்டை நாடுகள் தங்களின் நாட்டுக்குள் அனுமதிக்க மறுத்ததால் நடுகடலில் தத்தளித்தனர்.

அதிகரிக்கும் கண்டனங்கள்:

அதிகரிக்கும் கண்டனங்கள்:

பின்னர் மலேசியாவும், இந்தோனேசியாவும் அடைக்கலம் கொடுக்க முன் வந்தது குறிப்பிடதக்கது. ரோஹிங்கியா முஸ்லிம் மக்களுக்கு நடக்கும் கொடுமைகளை கண்டித்து சர்வதேச அளவில் கடும் கண்டன குரல் எழும்பி வருகின்றன‌.

English summary
In harrowing attempts to migrate to nearby countries such as Malaysia and Indonesia, many Rohingya ended up stuck on overcrowded boats at sea, with no country willing to grant them safe landing. Hundreds of others have died when such migrant boats capsized.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X