For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கேமரூன் ரயில் விபத்து 55 பேர் பலி - 600 பேர் படுகாயம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

கேமரூன்: மேற்கு ஆப்பிரிக்கா நாடான கேமரூனில் பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 55 பேர் உயிரிழந்துள்ளனர். 600 பேர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

மேற்கு ஆப்பிரிக்காவின் கேமரூன் நாட்டில் பயணிகள் ரயிலில் ஆயிரக்கணக்கானோர் பயணம் மேற்கொண்டிருந்தனர். கேமரூன் தலைநகர் யாவுண்டே மற்றும் மற்றொரு வர்த்தக நகரமான டவுலாலா இடையே இந்த பயணிகள் ரயில் சென்றது. ரயில், எசெகா நகரினை அடைவதற்கு சற்று முன்பு தடம் புரண்டது. ஏராளமான ரயில் பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு வெகுதூரம் துண்டிக்கப்பட்டு விழுந்தது.

Cameroon train crash: 55 killed, 600 hundreds injured

இந்த கோர விபத்தில் சுமார் 55 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 600 பேர் படுகாயம் அடைந்ததாகவும் அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக் கிடமாக உள்ளது. கடுமையாக போக்குவரத்து இடையூறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கேமரூன் போக்குவரத்து துறை அமைச்சர் எட்கர் அலென் தெரிவித்தார். விபத்து நடைபெற்ற இடத்திற்கு அந்நாட்டின் அமைச்சரவை குழு விரைந்துள்ளது.

கேமரூரின் கன மழை பெய்வதால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அதனால் பேருந்து பயணத்தை தவிர்த்து மக்கள் ரயிலில் பயணித்துள்ளனர். அனைத்து ரயில்களிலுமே கூட்டம் அதிகமாகவே காணப்படுவதாக அந்நாட்டு ஊடகங்கள் கூறியுள்ளன.

English summary
At least 55 people were killed and nearly 600 injured when an overloaded passenger train travelling between Cameroon's two largest cities derailed and overturned.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X