For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிலம்பம் சுற்றும் கனடா பிரதமர்: சமூக வலைதளங்களில் வலம் வரும் புகைப்படம்!!

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சிலம்பம் சுற்றும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. ஜஸ்டின் ட்ரூடோ நேற்று தமிழில் பொங்கல் வாழ்த்து கூறினார்.

Google Oneindia Tamil News

சென்னை: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தமிழர்களின் பாரம்பரிய கலைகளுல் ஒன்றான சிலம்பத்தை சுற்றி அசத்தியுள்ளார். அவர் நேற்று கொஞ்சும் தமிழில் தமிழர்களுக்கு பொங்கல் வாழ்த்து கூறினார்.

கனடாவின் பிரதமராக பதவி வகிப்பவர் ஜஸ்டின் ட்ரூடோ. இவர் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் முழுவதையும் தமிழர்களின் கலாச்சார மாதமாக கடந்த ஆண்டு அந்நாட்டு நாடளுமன்றத்தில் அறிவித்தார்.

தமிழர் திருநாளாம் நேற்று தமிழக மக்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களை தமிழில் தெரிவித்தார். அந்த வாழ்த்து செய்தி வீடியோவாக வெளியிடப்பட்டது.

அதில் கனடாவின் வளமான நாடாக வளர்ச்சி பெறவும் நாட்டை வலிமையான நாடாக ஆக்கியவர்களும் தமிழர்கள் என அவர் புகழாரம் சூட்டியிருந்தார். கனடா பிரதமர் தமிழர்களை புகழ்ந்து அவர்களின் மொழியிலேயே பொங்கல் வாழ்த்து கூறியது உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.

இந்நிலையில் தமிழர்களின் பாரம்பரிய கலைகள் ஒன்றான சிலம்பாட்டத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் கனடா பிரதமர் சிலம்பம் சுற்றிய புகைப்படம் தற்போது சமுக வலைதளங்களில் வலம் வருகிறது. 2015ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழர்களின் பாரம்பரிய விழாவில் கலந்துகொண்ட பிரதமர் ஜஸ்டின் ரூடோ சிலம்பம் சுற்றியுள்ளார்.

அந்தப் புகைப்படம் தற்போது மீண்டும் சமுக வளைதளங்களில் தீயாக பரவி வருகிறது.

English summary
Canadian Prime minister rotating Tamil's tradition art silambam in a tamil cultural festival in canada. That photo is now spreading in social network.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X