For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மூன்றரை கி.மீ தூரத்திலிருந்து தீவிரவாதியை சுட்டு கொன்று உலக சாதனை படைத்த ராணுவ வீரர்!

By Veera Kumar
Google Oneindia Tamil News

பாக்தாத்: கனடா நாட்டை சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதி ஒருவரை சுமார் மூன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து சரியாக சுட்டு வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

ஈராக்கின் மொசூல் பகுதியில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை ஒடுக்குவதற்காக, கூட்டு ராணுவ படைகள் குவிக்கப்பட்டுள்ளன. இதில் கனடா நாட்டை சேர்ந்த கமாண்டரும் ஒருவர்.

Canadian sniper hits ISIS militant 3.54 kilometres away, shatters records

இதுகுறித்து கனடாவின் சிறப்பு ஆபரேஷன் கமாண்ட் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் நேச நாட்டு படைகள் குறித்த விவரங்களை வெளியிடுவதில்லை என்ற கொள்கை மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக, இந்த துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட வீரர் பெயர் மற்றும் நடந்த சம்பவம் குறித்த தகவலை வெளிப்படுத்த முடியாது எந்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ராணுவ வீரர், McMillan TAC-50 என்ற வகை ரைபிளை கொண்டு இந்த சாதனையைபடைத்துள்ளார். உயரமான ஒரு இடத்தில் இருந்து சுட்டதாக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சரியாக 3540 மீட்டர் தொலைவில் இருந்து, துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார் அந்த வீரர். இதற்கு முன்பு, 2009ம் ஆண்டு இங்கிலாந்தை சேர்ந்த கிரேக் ஹரிசன் என்ற வீரர் தாலிபான் தீவிரவாதிகள் இருவரை 2.4 கி.மீ தொலைவில் இருந்து சுட்டதுதான் சாதனையாக இருந்தது.

English summary
This Canadian sniper has created a world record after he hit an Islamic State terrorist from a distance of 3,540 metres ie 3.54 kilometres. The feat was achieved by the sniper while assisting Iraqi forces at Mosul in Iraq. The information was revealed by the Special Operations Command, Canada. The unnamed sniper was part of Canada's elite Joint Task Force 2 special operations unit that is currently deployed in an "advise and assist" capacity to help Iraqi security forces battle ISIS from behind the front line in Mosul.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X