For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான யுத்தம்: குர்து படையினருடன் கை கோர்த்த கனடிய-அமெரிக்க வீரர்கள்!

By Mathi
Google Oneindia Tamil News

மொசூல்: ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான யுத்தத்தில் குர்து படையினருடன் கனடா மற்றும் அமெரிக்கா வீரர்களும் இணைந்துள்ளனர்.

ஐ.எஸ் தீவிரவாதிகள் ஈராக் மற்றும் சிரியாவின் பெரும் பகுதியை கைப்பற்றி இஸ்லாமிய அரசாக அறிவித்து உள்ளனர். ஐ.எஸ் தீவிரவாதிகள் ஈராக் மற்றும் சிரியாவில் குர்து படைகளூக்கு எதிராக அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

Canadian veterans join Kurdish battle against ISIS

துருக்கி எல்லையில் உள்ள சிரியாவின் பல நகரங்களை கைப்பற்றிய ஐ.எஸ் தீவிரவாதிகள் குர்து இன மக்களை நகரை விட்டு வெளியேற்றி உள்ளனர். இதனால் லட்சக்கணக்கான குர்து இன மக்கள் அகதிகளாக துருக்கி சென்று உள்ளனர். ஈராக் மற்றும் சிரியா நகரங்களை மீடக குர்து படையினர் ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் கடுமையாக போராடி வருகின்றனர்.

ஐரோப்பாவை சேர்ந்தவர்கள் மற்றும் அமெரிக்கர்கள் சிரியாவுக்கு பயணம் செய்து குர்து இனத்தவர்களுக்காக ஐ.எஸ் தீவிரவாதிகளூக்கு எதிராக போராடுகின்றனர்.

ஈராக்கின் வடகிழக்கு பகுதியில் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக குர்து பெஷ்மெர்கா படையினர் போராடி வருகின்றனர். தற்போது இந்த பெஷ்மெர்கா படையில் கனடிய போர்வீரர்கள் 6 பேர் சேர்ந்து உள்ளனர். ஏற்கனவே 3 கனடியர்கள் ஈராக்குக்கு சென்று ஐ.எஸ் தீவிர்வாதிகளுக்கு எதிராக குர்து படையினருடன் இணைந்து போரிட்டு வருகிறார்கள்.

இதில் கனடியன் - இஸ்ரேலி ஜில் ரோஸன் பெர்க் என்ற பெண் வீரரும் அடங்குவார் இவர இஸ்ரேலிய பாதுகாப்பு படையில் பணி புரிந்தவர். ஆப்கானிஸ்தான் போரில் பங்குபெற்ற வீரர் டில்லோன் கில்லியர் என்பவரும் அடங்குவார்.

மேலும் 3 அமெரிக்க நாட்டை சேர்ந்தவர்களும் குர்து படையுடன் இணைந்து போரிட்டு வருகின்றனர்.அமெரிக்க விமான படையை சேர்ந்த பிரைன் விலசன் கடந்த அக்டோபர் மாதம் முதல் குர்து படையில் இணைந்து போராடி வருகிறார். ஜெர்மி உட்டர்ட். மிசிசிபியை சேர்ந்த 28 வயது மெரிடியன், இவர்கள் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போரில் பணியாற்றியவர்கள்

English summary
The Islamic State has been able to attract various foreigners to its side in the escalating conflict in the Middle East, but now some Canadian veterans are joining Kurdish fighters in an attempt to beat back the extremist group in Iraq and Syria.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X