For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிரியாவுக்குப் பறந்த 3 லண்டன் சிறுமிகள்.... இஸ்தான்புல் நகர் சிசிடிவியில் பதிவு!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

இஸ்தான்புல்: இங்கிலாந்தைச் சேர்ந்த 3 சிறுமிகள், சிரியாவில் உள்ள ஐஎஸ்எஸ் தீவிரவாத அமைப்பில் சேருவதற்காக சென்றபோது, இஸ்தான்புல் நகரில் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தது சிசிடிவி காமராவில் பதிவாகியுள்ளது.

இஸ்தான்புல் பஸ் நிலையத்தில் இவர்கள் காத்திருந்தனர். அங்கிருந்து சிரிய எல்லையில் உள்ள துருக்கி நகர் ஒன்றுக்குச் சென்று அங்கிருந்து ஐஎஸ் தீவிரவாதிகளின் முகாமுக்குச் சென்றுள்ளனர்.

CCTV shows British schoolgirls in Istanbul on way to Syria: media

ஈராக் மற்றும் சிரியாவின் பல்வேறு நகரங்களை பிடித்து வைத்து உள்ள ஐ.எஸ் தீவிரவாதிகள் அவற்றை இஸ்லாமிய அரசாக அறிவித்து உள்ளனர். உலகம் முழுவதும் இருந்தும் பல்வேறு நாட்டை சேர்ந்த ஜிகாதி ஆர்வலர்களை தங்கள் இயக்கத்தில் சேர்த்து வருகின்றனர். இதனால் பல நாடுகள் அதற்கு தடைவிதித்து உள்ளன.

இந்த நிலையில் ஐ.எஸ் இயக்கத்தில் சேருவதற்கு இங்கிலாந்தை சேர்ந்த 3 பள்ளி மாணவிகள் வீட்டை விட்டு வெளியேறி சிரியா சென்று உள்ளனர்.

ஷாமினா பேகம் (வயது 15) கதீஜா சுல்தானா (வயது 16) மற்றும் 15 வயதான அமீரா அப்பாசி ஆகியோர் தீவிரவாத இயக்கத்தில் சேருவதற்கு சிரியா சென்று உள்ளனர். ஷாமினா அகிலாம பேகம் என்ற பெயரில் பயணம் மேற்கொண்டு உள்ளார் என ஸ்காட்லாந்து தீவிரவாத எதிர்ப்பு உளவுபிரிவினர் தெரிவித்து உள்ளனர்.

இந்த 3 மாணவிகளும் கடந்த செவ்வாய்கிழமை காலை வீட்டை விட்டு வெளியேறி கேட்விக் விமான நிலையத்தில் சந்தித்து கொண்டனர். இஸ்தான் புல் செல்லும் துருக்கி ஏர்லைன்ஸ் விமானத்தில் ஏறி உள்ளனர். இவர்கள் 3 பேரும் கிழக்கு லண்டனில் உள்ள பெத்னல் பசுமை அகாடமியை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

இஸ்தான்புல் நகரில்

இதுகுறித்து மெட்ரோபாலிடன் போலீசாருக்கு உளவுத்துறையினர் தகவல் தெரிவித்து உள்ளனர். இதை தொடர்ந்து போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இஸ்தான்புல் நகரில் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தது சிசிடிவி காமராவில் பதிவாகியுள்ளது.

இஸ்தான்புல் பேருந்து நிலையத்தில் இவர்கள் காத்திருந்தனர். அங்கிருந்து சிரிய எல்லையில் உள்ள துருக்கி நகர் ஒன்றுக்குச் சென்று அங்கிருந்து ஐஎஸ் தீவிரவாதிகளின் முகாமுக்குச் சென்றுள்ளனர்.

பள்ளிச்சிறுமிகள்

இவர்களுக்கு வயது 15 மற்றும் 16 என்பது குறிப்பிடத்தக்கது. 16 வயதான கடிஸா சுல்தானா மற்றும் 15 வயதான ஷமீமா பேகம் மற்றும் அமீரா அபாஸ் ஆகியோரே இவர்கள். இவர்கள் லண்டனிலிருந்து விமான் மூலம் பிப்ரவரி 17ஆம் தேதி இஸ்தான்புல் வந்தனர்.

பெற்றோர் கவலை

இவர்கள் தற்போது சிரியாவுக்குள் போய் விட்டதாக நம்பப்படுகிறது. இதனால் இவர்களது குடும்பத்தினர் பெரும் கவலையடைந்துள்ளனர். மூன்று பேரும் திரும்பி வர வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இஸ்தான்புல்லின் பேரம்பாசா மாவட்டத்தில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தபோதுதான் இவர்கள் சிசிடிவி காமராவில் சிக்கியுள்ளனர். மூன்று பேரும் லக்கேஜ்களைச் சுமந்தபடி காணப்பட்டனர்.

மாணவிகள் மூவரும்

பிப்ரவரி 18ஆம் தேதி அதிகாலையில் இவர்கள் அங்கு நின்றிருந்தனர். இந்த பேருந்து நிறுத்தத்தில் சுமார் 18 மணி நேரத்திற்கு இவர்கள் காத்திருந்துள்ளனர். அதன் பின்னர் சிரிய எல்லையையொட்டியுள்ள துருக்கி நகரமான சன்லிபுர்காவுக்கு அவர்கள் பேருந்தில் ஏறிச் சென்றுள்ளனர்.

துருக்கி வழியாக சிரியா

உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து ஐஎஸ் அமைப்பில் சேர வரும் பலரும் துருக்கி வழியாகத்தான் சிரியாவுக்குச் செல்கின்றனர். ஆனால் அப்படி வருகிறவர்களை தடுத்து நிறுத்த துருக்கி அரசும், காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை என்று பல மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.

பெற்றோர் அதிர்ச்சி

சமீபத்தில்தான் இங்கிலாந்தைச் சேர்ந்த 60 பெண்கள் சிரியாவுக்கு சென்றுள்ளதாக செய்திகள் வெளியாகின. இதில் 18 பேருக்கு வயது 20 அல்லது அதற்கும் குறைவுதான் என்பது அதிர்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது.

இதுவரை மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த 550 பெண்கள் சிரியா மற்றும் ஈராக்கில் செயல்படும் ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Security footage appears to show three British girls, believed to be heading for Syria to join Islamic State (IS) militants, waiting at a bus station in Istanbul before travelling to a Turkish town on the Syrian border, media reports say. Close friends Kadiza Sultana, 16, and 15-year-olds Shamima Begum and Amira Abase, boarded a flight from London to Istanbul on February 17.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X