For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குழந்தை சார்லியின் இறுதி தருணங்களில் உடனிருக்கும் பெற்றோர்

By BBC News தமிழ்
|

சிகிச்சை அளித்தாலும் பலன்தராத வியாதி ஒன்றில் பாதிக்கப்பட்ட குழந்தையின் கடைசி நாட்களை அதனுடன் உடனிருந்து கழித்து வருகின்றனர் அதன் பெற்றோர் .

குழந்தையின் கடைசி தருணங்கள்
PA
குழந்தையின் கடைசி தருணங்கள்

சார்லி கார்டு என்ற அந்த குழந்தையின் பெற்றோர்களான கிறிஸ் கார்ட் மற்றும் கோன்னி யெட்ஸ் எஞ்சியிருக்கும் நாட்களில் "அதிகளவு நேரத்தை அக்குழந்தையுடன் செலவழிக்கவுள்ளதாக" அவர்களின் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

குழந்தை சார்லியின் அரிய மரபணு நிலைக்கு சிகிச்சை அளிக்கும் காலம் கடந்துவிட்டதாக அமெரிக்க மருத்துவர்கள் தெரிவித்த பிறகு சார்லியின் பெற்றோர்களின் வழக்கு முடிவுக்கு வந்தது.

சார்லியின் பெற்றோர்கள் செவ்வய்க்கிழமையன்று மதியம் நீதிமன்றதிற்கு வந்தனர்.

கிரேட் ஆர்மாண்ட் ஸ்டீரிட் மருத்துவமனை அதன் செயற்கை சுவாச கருவியை எப்போது நிறுத்தும் என்று அறிவிக்கவில்லை.

ஆகஸ்ட் 4ம் தேதி, சார்லிக்கு பிறந்தநாள் என்றும், ஆனால் அந்நாள் வரை சார்லி தங்களுடன் இருக்க மாட்டான் என்று குழந்தையின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

சார்லிக்கு "என்சிஃபாலோ மியோபேதெடிக் மைடோகாண்டிரியல் டிஎன்ஏ சிண்ட்ரோம்" என்ற அரிய நோய். இதனால் பொதுவாக மூளையும் தசைகளும் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

ஸ்கேன் விளைவுகள்:

இந்த அரிய நோய்க்கு சார்லிக்கு அமெரிக்காவில் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்று சார்லியின் பெற்றோர் வழக்கு தொடர்ந்தனர் எனினும் அது "பயன் தராது" என சார்லி கார்ட் அனுமதிக்கப்பட்டிருக்கும் லண்டன் மருத்துவமனை இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் புதிய மெஆர்ஐ ஸ்கேன்களை சோதித்த பிறகு அமெரிக்க நரம்பியல் நிபுணர், மருத்துவர் மிக்ஹியோ ஹிரானோ இந்த சோதனை சிகிச்சையை குழந்தைக்கு அளிக்க விருப்பமில்லை என உயர்நீதிமன்றத்தின் குடும்ப கிளையிடம் தெரிவித்தார்.

பின்னர் நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே பேசிய குழந்தை சார்லியின் தந்தை கார்ட், "இன்னும் இரண்டு வாரத்தில் சார்லியின் பிறந்த நாள் வரவிருக்கிறது ஆனால் அது வரை அவனால் உயிரோடு இருக்க முடியாது. எங்களின் குழந்தையின் கடைசி தருணங்களை நாங்கள் அவனுடன் கழிக்கவுள்ளோம்" என தெரிவித்தார்.

குழந்தையின் கடைசி தருணங்கள்
PA
குழந்தையின் கடைசி தருணங்கள்

"நாங்கள் உன்னை நேசிக்கிறோம்; சார்லி எப்போதும் உன்னை நேசிப்போம். உன்னை எங்களால் காப்பாற்ற முடியவில்லை; எங்களை மன்னித்து விடு" என்று சார்லியின் பெற்றோர் தெரிவித்தனர்.

இந்த அசாதாரண வழக்கிலிருந்து பாடம் கற்று கொள்ளப்படும் என நம்புவதாக நீதிபதி ஃபிரான்ஸிஸ் தெரிவித்தார்.

வழக்கு தொடர்வதை தவிர்த்து இம்மாதிரியான, குழந்தைகளுக்கான வாழ்வா சாவா சிகிச்சைகளில் மருத்துவமனை உரிமையாளர்களும் பெற்றோர்களும் பேசி ஒரு முடிவுக்கு வர வேண்டும் என பரிந்துரைப்பதாக நீதிபதி தெரிவித்தார்.

ஒரு குழந்தையின் வாழ்வு அல்லது இறப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்த முடியாத காரியம் என்பதை நான் உணர்கிறேன்

இருப்பினும் அனைத்து வழக்குகளிலும் மத்தியஸ்தத்தை அடைய முடியும் என நான் நம்புகிறேன் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டால் அது நடைபெறும் என அவர் தெரிவித்தார்.

குழந்தையின் கடைசி தருணங்கள்
PA
குழந்தையின் கடைசி தருணங்கள்

லண்டன் க்ரேட் ஆர்மண்ட் ஸ்டீர்ட் மருத்துவமனை சார்லிக்கு வழங்கிவரும் சிகிச்சை இனிமேல் பயனளிக்காது என்றும், செயற்கை சவாசத்தையும் நிறுத்த வேண்டும் என்றும் தெரிவித்த பிறகு சார்லிக்கு மேல் சிகிச்சை அளிக்க வேண்டும் என ஐந்து மாத காலமாக சார்லியின் பெற்றோர் வழக்காடி வருகின்றனர்.

அவர்கள் உயர்நீதிமன்றம், மேல் முறையீட்டு நீதிமன்றம், லண்டன் உச்ச நீதிமன்றம், ஆகியவற்றில் அவர்களுக்கு சாதகமான தீர்ப்பை பெற முடியவில்லை மேலும், மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்ற நீதிபதிகளையும் இதில் தலையீடுவதற்கு ஒப்புக் கொள்ள வைக்க அவர்களால் முடியவில்லை.

சார்லியின் நிலை உயிர் பிழைக்க முடியாத அளவிற்கு சென்றுவிட்டதாக புதிய ஸ்கேனில் தெரியவந்த பிறகு சார்லியின் பெற்றோர் இந்த கடினமான முடிவை எடுத்துள்ளனர்.

சார்லியின் நினைவாக தொண்டு நிறுவனம் ஒன்றை தொடங்கவுள்ளனர் சார்லியின் பெற்றோர்.

சார்லியை அமெரிக்கா அழைத்துச் சென்று சிகிச்சையளிக்க அவர்கள் 1.3 மில்லியன் பவுண்டுகளை சேகரித்துள்ளனர்.'

சார்லியின் பெற்றோர்கள் நீதிமன்றத்தில் நடத்திய போராட்ட த்தின் கால அட்டவணை:

3 மார்ச் 2017 : லண்டன் உயர்நீதிமன்றத்தின் குடும்ப நல பிரிவில் வழக்கை நீதிபதி ஃபிரான்ஸிஸ் வழக்கை விசாரிக்க தொடங்கினார்.

11 ஏப்ரல் : மருத்துவர்கள் இயற்கை சுவாசத்தை நிறுத்தலாம் என நீதிபதி ஃபிரான்ஸிஸ் தெரிவித்தார்.

3 மே : இந்த வழக்கை மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் கருத்தில் கொல்ல வேண்டும் என சாலியின் பெற்றோர்கள் தெரிவித்தனர்.

23 மே : மேல்முறையீட்டு நீதிபதிகள் மூன்று பேர் வழக்கை விசாரித்தனர்.

25 மே : சார்லியின் பெற்றோர்களின் மேல்முறையீட்டை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

8 ஜூன் : சார்லியின் பெற்றோர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கில் தோல்வியுற்றனர்.

20 ஜூன் : சார்லி பெற்றோர் தரப்பு வழக்கறிஞர்கள் மனித நேயத்திற்கான ஐரோப்பிய நீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வமான கோரிக்கைகளை வைத்ததால் இந்த வழக்கை அவர்கள் ஆராய தொடங்கினர்.

27 ஜூன் : ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகள் இந்த வழக்கில் தலையிட மறுத்துவிட்டனர்.

3 ஜூலை : போப்பும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் இதில் தலையிட விருப்பம் தெரிவித்தனர்.

7 ஜூலை : கிரேட் ஆர்மண்ட் ஸ்டீரிட் மருத்துவமனை புதிய தொரு விசாரணைக்கு உயர்நீதிமன்றத்தில் முறையிட்டது

24 ஜூலை : சார்லியை சிகிச்சைக்காக அமெரிக்காவிற்காக அழைத்துச் செல்லும் வழக்கில் சார்லியின் பெற்றோர் தோல்வியடைந்தனர்.

பிற செய்திகள்

BBC Tamil
English summary
The parents of terminally ill baby Charlie Gard have ended their legal challenge to take him to the US for experimental treatment.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X