For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

”என் வாழ்வும், சாவும் எந்தன் காதல் உன்னோடுதான்” - கைகோர்த்து மரணித்த 75 வருட காதல் தம்பதி!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: காதல்... இந்த வார்த்தைக்குதான் எவ்வளவு சக்தி? இறப்பில் கூட சேர்ந்து வாழும் பாக்கியத்தை குழந்தைப் பருவம் முதல் காதல் செய்து வாழ்ந்து வந்த தம்பதிக்கு அளித்துள்ளது இந்த மகத்தான மனித உணர்வு.

அமெரிக்காவில் உள்ள சாண்டியாகோ நகரை சேர்ந்த ஜேனட் மற்றும் அலெக்சாண்டர் ஆகிய தம்பதிதான் அந்த அதிர்ஷ்டசாலிகள்.

கிட்டதட்ட 75 வருட மணவாழ்க்கையில் காதலை மட்டுமே அனுபவித்த இந்தத் தம்பதியினர் இறப்பிலும் ஒன்றாகவே சென்றுள்ளனர் மேலுலகிலும் தங்கள் காதலைப் பரப்ப கைகோர்த்து.

Childhood Lovers Married for 75 Years Die Holding Hands

8 வயதில் மலர்ந்த காதல்:

கனெக்டிகட் மாகாணத்தில் உள்ள ஸ்டாம்போர்டு நகரில் கடந்த 1919 ஆம் ஆண்டு ஜேனட்டும், அலெக்சும் பிறந்தனர். தங்களது 8 வயது முதல் இருவரும் ஒருவரையொருவர் விரும்ப ஆரம்பித்தனர். நீண்ட நாள் காதல் வாழ்க்கைக்கு பின் கடந்த 1940 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டு இல்லற வாழ்வை இனிதே தொடங்கினர். இருவருக்கும் ரிச்சர்ட் மற்றும் ஏமி என இரு குழந்தைகள் உள்ளனர்.

நமக்கு என்றும் பிரிவே இல்லை:

பின்னர் கடந்த 1970 ஆம் ஆண்டு, ஸ்டாம்போர்டு நகரில் இருந்து சாண்டியாகோ நகருக்கு இடம் பெயர்ந்தனர். அதன் பின் மரணத்தை தழுவும் வரை இருவரும் ஒருவரையொருவர் பிரிவதில்லை என்று முடிவெடுத்தனர். இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் தங்களது திருமணத்தின் வெள்ளி விழா நாளை தம்பதியர் இருவரும் பெருமகிழ்ச்சியுடன் கொண்டாடினர். அதன் பின்னர் அடுத்த சில நாட்களில் 95 வயது அலெக்சாண்டரின் உடல்நிலை மோசமடைந்தது.

உன் கைகளில்தான் என் மரணம்:

அப்போது தனது காதல் மனைவி ஜேனட்டிடம், "உனது கைகளில் நான் மரணத்தை தழுவ விரும்புகிறேன்" என்றார் அவர். தனது மகனை அழைத்த ஜேனட், நாங்கள் இருவரும் எங்களது படுக்கையில் கைகளை கோர்த்தவாறு மரணத்தை தழுவ விரும்புகிறோம் என்றார். அவர்கள் எண்ணப்படியே கடந்த ஜூன் 17 ஆம் தேதி தங்களது படுக்கையறையில் ஜேனட்டின் கைகளை பிடித்துக்கொண்டே அலெக்சாண்டர் மரணத்தை தழுவினார்.

ஐ லவ் யூ ஜேனட் நானும் வருகிறேன்:

அவர் மரணமடைந்துவிட்டார் என மகள் ஏமி கூறியதும், தனது கணவரை கட்டியணைத்த ஜேனட், இதைத் தானே நீங்கள் விரும்பினீர்கள் அலெக்ஸ். எனது கைகளில் தான் நீங்கள் மரணத்தை தழுவினீர்கள். ஐ லவ் யூ...எனக்காக காத்திருங்கள். சிறிது நேரத்தில் நானும் அங்கு வந்துவிடுகிறேன் என்று கூறினார்.

இருவருக்கும் இயற்கை மரணம்:

அதன்படியே அடுத்த சில நிமிடங்களில் ஜேனட்டும் இயற்கையாகவே மரணத்தை தழுவினார். அப்போது இருவரின் கரங்களும் ஒன்றோடு ஒன்று சேர்ந்திருந்தன.

வாழ்க்கையின் மகத்துவம் இதுதான்:

இப்படி ஒரு அற்புதமான வாழ்க்கையை வாழ்ந்த தம்பதியரின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய அனைவரும், அவர்களின் ஒற்றுமையான வாழ்க்கையை புகழ்ந்தவாறு ஆனந்த கண்ணீர் சிந்தினர். ஒரு இறப்பு கூட காதலின் மகத்துவத்தையும், வாழ்க்கையின் அர்த்ததையும் புரிய வைக்கும் என்பதை உணர்த்தியுள்ளனர் இந்த ஆதர்ச தம்பதியினர்!

English summary
An American couple, who had been married for 75 years fulfilled their final wish to die in each other's arms after they passed away holding hands, within hours of each other.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X