For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

போக்குவரத்து நெரிசலைக் குறைக்க சீனாவில் நூதனமான லேன்ட் ஏர்பஸ் அறிமுகம்!

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: சீனாவில் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க விரைவில் லேண்ட் ஏர்பஸ் என்ற புதிய போக்குவரத்தை அந்நாட்டு அரசு அறிமுகப்படுத்துகிறது.

Chinas Land Airbus

சீனாவில் போக்குவரத்து நெரிசலை சமாளிக்கும் வகையில் "லேண்ட் ஏர்பஸ்" என்ற பேருந்தை தயாரிக்க அந்நாடு திட்டமிட்டுள்ளது. இதற்கான அனிமேஷன் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பஸ்ஸைப் பார்த்தால் அப்படியே பயந்து போய்ருவீங்க. ராட்சத அலை வந்து வாரிச் சுருட்டிச் செல்வது போலத்தான் இது உள்ளது. அதாவது இந்த லேன்ட் ஏர் பஸ்ஸானது வழக்கமான பஸ்களைப் போலத்தான் சாலையில் செல்லும். ஆனால் இந்த பஸ் போய்க் கொண்டிருக்கும்போது அதன் முன்னால் கார் சென்றால் அதை அப்படியே விழுங்குவது போல சென்று கடக்கும்.

அதேபோல இந்தப் பஸ்ஸின் கீழ் பக்கமாக கூடி மற்ற கார்கள், சிறிய வகை வாகனங்கள் கடந்து செல்ல முடியும். ஆனால் பெரிய வகையிலான பேருந்துகள், லாரிகள் போன்றவை செல்ல முடியாது. சீனாவின் பெரும்பாலான நகர்புறங்களில் ஏற்கெனவே கனரக வாகனங்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது என்பதால் அது பாதிப்பை ஏற்படுத்தாது என கருதப்படுகிறது.

"லேண்ட் ஏர்பஸ்" மணிக்கு சுமார் 60 கிமீ மீட்டர் வரை செல்லும். முக்கியமாக இந்த பேருந்தில் சுமார் 1,400 பேர் பயணம் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது. புதிய அதிநவின தொழில் நுட்பத்தில் உருவாகும் இந்த பேருந்தின் முழு வடிவம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாக வாய்ப்பு உள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

English summary
A new take on mass transit may be headed to China as early as the end of the year: A so-called "Land Airbus" system that looks like an overgrown monorail as it motors over existing lanes of traffic.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X