For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நிலவைச் சுற்றி வரும் சீன விண்கலம்.. அசர வைக்கும் படங்களை அனுப்புகிறது!

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: நிலவுக்கு சோதனை ரீதியிலான விண்கலத்தை அனுப்பியுள்ள சீனா தனது விண்கலத்தின் மூலம் நிலவு மற்றும் பூமியின் அபாரமான புகைப்படங்களைப் பெற்றுள்ளது.

சோதனை ரீதியிலான விண்கலமாகும் இது. தற்போது இது நிலவைச் சுற்றி வந்துகொண்டுள்ளது. நாளை இது பூமிக்குத் திரும்புகிறது.

மொத்தம் எட்டு நாள் பயணமாக இந்த விண்கலத்தை சீனா அனுப்பியது. வருகிற 2017 ஆம் ஆண்டு நிலவுக்கு ஒரு ஆளில்லாத விண்கலத்தை அனுப்ப சீனா திட்டமிட்டுள்ளது.

Chinese craft orbiting the moon sends back stunning shot of the lunar surface…

சோதனைப் பயணம்:

அதற்கு முன்னோட்டமாக இந்த சோதனை பயணத்தை அது நடத்தியுள்ளது. இந்த சோதனை விண்கலம், தனது பயணத்தை முடித்துக் கொண்ட பின்னர் மணிக்கு 25,000 மைல்கள் என்ற வேகத்தில் பூமியை நோக்கி வரும். மேலும் மங்கோலியாவில் இது தரையிறங்கும்.

மூன்றாவது நாடாகும் சீனா:

நிலவில் இதுவரை அமெரிக்காவும், ரஷ்யாவும் மட்டுமே ஆய்வு நடத்தியுள்ளன. சீனாவின் நிலவுத் தரையிறங்கும் படலம் வெற்றிகரமாக நடைபெற்றால் இந்த வரிசையில் சீனாவும் 3வது நாடாக சேரும்.

"சாங்" என்னும் பயணம்:

சீனா தனது நிலவுப் பயணத்திற்கு சாங் என்று பெயரிட்டுள்ளது. இது ஒரு புராதணக் கடவுளின் பெயராகும்.

தரை இறக்காத இந்தியா:

ஏற்கனவே இந்தியா தனது சந்திரயான் விண்கலம் மூலம் நிலவில் சோதனை நடத்தியுள்ளது. ஆனால் இந்தியா இதுவரை எந்த ஒரு விண்கலத்தையும் நிலவில் தரையிறக்கியதில்லை.

பின்னுக்கு தள்ள முயலும் சீனா:

அதேசமயம், சீனாவால் சாதிக்க முடியாத செவ்வாய் கிரக வெற்றியை இந்தியா நிகழ்த்தி அதை பின்னுக்குத் தள்ளி விட்டுள்ளது. இந்த நிலையில் நிலவில் இந்தியாவை பின்னுக்குத் தள்ள சீனா முயற்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

English summary
It is a stunning family portrait of the Earth and its moon. China's experimental spacecraft, currently flying around the moon before returning to Earth on Saturday, has captured these incredible images. The eight-day mission is seen as a test-run for the country's first unmanned return trip to the lunar surface, which will take place in 2017.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X