For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வாரண்டி பீரியடுக்கு முன்பே செயலிழந்த சீன விண்வெளி நிலையம்.. பூமியை நோக்கி விழுகிறது! #tiangong1

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: சீனாவின் முதல் விண்வெளி நிலையம் என்ற பெருமையைப் பெற்ற டியான்காங் 1 விண்வெளி நிலையம் கட்டுப்பாட்டை இழந்து விட்டது. அது பூமியை நோக்கி வருவதாகவும், பூமியில் வந்து அது விழும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் பூமியில் எங்கு வந்து விழும் என்பது தெரியவில்லை. கடந்த 2011ம் ஆண்டு செப்டம்பர் மாதம் விண்ணுக்கு அனுப்பப்பட்டது இந்த விண்வெளி நிலையம். டியான்காங் 1 என பெயரிடப்பட்ட இது சீனாவின் முதல் விண்வெளி நிலையம் ஆகும்.

டியான்காங் 1 விண்வெளி நிலையத்தை அடிப்படையாக வைத்து 2020ல் மிகப் பெரிய விண்வெளி நிலையத்தை கட்டமைக்க திட்டமிட்டிருந்தது சீனா. ஆனால் டியான்காங் 1 தற்போது கட்டுப்பாட்டை இழந்து விட்டதால் பூமியில் வந்து விழப் போகிறது. பூமியில் விழும்போது துகள்களாக வந்து விழும் எனத் தகவல்.

2017ல் பூமியில் வந்து விழும்

2017ல் பூமியில் வந்து விழும்

இருப்பினும் அடுத்த ஆண்டுதான் இந்த விண்வெளி நிலையம் பூமியில் வந்து விழுமாம். இதுதொடர்பான செய்திகள் முன்பு வதந்தியாக வலம் வந்தன. தற்போது சீனாவே அதை உறுதிப்படுத்தி விட்டது. விண்வெளி நிலையம் கட்டுப்பாட்டை இழந்து விட்டதாக அது கூறியுள்ளது.

எரியும் அல்லது விழும்

எரியும் அல்லது விழும்

இந்த விண்வெளி நிலையமானது அப்படியே முழுமையாக பூமியில் வந்து விழ வாய்ப்பில்லை. மாறாக அது வளிமண்டலத்திற்குள் நுழைந்ததுமே எரிந்து விடும். உதிரி பாகங்களாக அது பூமியில் வந்து விழும். கடலில் அது விழலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இதை சீனாவோ அல்லது நாசாவோ உறுதிபடச் சொல்ல முடியவில்லை. அது எங்கு விழும் என்பதை அனுமானிக்க முடியவில்லை என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

போறது ஈசி.. திரும்புறது கஷ்டம்

போறது ஈசி.. திரும்புறது கஷ்டம்

பூமிக்கு ஒரு விண்கலம் பத்திரமாக திரும்புவது என்பது எல்லா நாடுகளுக்கும் இன்னும் சாத்தியமாகவில்லை. அது மிகப் பெரிய கடினமான ஒன்றாகும். காரணம், பூமியிலிருந்து விண்வெளிக்கு ஏவுவதை விட பூமிக்கு விண்கலத்தைத் திரும்பக் கொண்டு வருவது ரொம்பக் கஷ்டமான காரியமாகும்.

முக்கால்வாசி எரிந்து விடு்ம்

முக்கால்வாசி எரிந்து விடு்ம்

சீன விண்வெளி நிலையம் குறித்து சீன விணவெளி என்ஜீனியரிங் அலுவலக துணை இயக்குநர் வூ பிங் கூறுகையில் பூமியில் வந்து விழுவதற்கு முன்பே பெரும்பாலான பகுதிகள் எரிந்து சாம்பலாகி விடும் என்றார்.

எதுக்கும் ராத்திரி தூங்கும்போது வானத்தை ஒருவாட்டி பார்த்துட்டு தூங்குங்க.. இப்ப இல்ல, அடுத்த வருஷம்!

English summary
Chinese space station Tiangong 1 will crash land in Earth next year said Chinese scientists
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X