For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கண் பார்வை கோளாறால் அவதிப்பட்ட ஜெர்மன்விங்ஸ் துணை விமானி: பகீர் தகவல்

By Siva
Google Oneindia Tamil News

பாரீஸ்: ஜெர்மன்விங்ஸ் விமானத்தை வேண்டுமே என்றே விபத்துக்குள்ளாகிய துணை விமானி லுபிட்ஸ் கண் கோளாறால் அவதிப்பட்டு வந்துள்ளார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஸ்பெயினில் இருந்து ஜெர்மனி சென்ற ஜெர்மன்விங்ஸ் விமானத்தை அதன் துணை விமானி ஆன்ட்ரியஸ் லுபிட்ஸ்(28) வேண்டும் என்றே விபத்துக்குள்ளாக்கினார். இதனால் விமானத்தில் இருந்த லுபிட்ஸ் உள்பட 150 பேர் பலியாகினர்.

இந்த சம்பவத்தை அடுத்து ஜெர்மனியின் பிரான்க்பர்ட் நகர் அருகே உள்ள மான்டபாரில் இருக்கும் லுபிட்ஸின் வீட்டில் சோதனை நடத்தியபோது அவருக்கு இருந்த பிரச்சனை ஒன்று பற்றி தெரிய வந்தது.

மனஅழுத்தம்

மனஅழுத்தம்

லுபிட்ஸ் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்துள்ளார். இதை அவரே தனது தோழி ஒருவரிடம் கடந்த டிசம்பர் மாதம் தெரிவித்துள்ளார்.

நோய்

நோய்

லுபிட்ஸுக்கு நோய் இருந்துள்ளது. அந்த விஷயத்தை அவர் ஜெர்மன்விங்ஸ் நிறுவனத்திற்கு தெரியாமல் வைத்துள்ளார். அந்த நோய்க்காக அவர் டுசல்டார்ப் நகரில் உள்ள யுனிக்லினிக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

கண் பார்வை

கண் பார்வை

லுபிட்ஸ் கண் பார்வை குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார் என்று விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்காக அவர் டுசல்டார்ப் பல்லைக்கழக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.

சோதனை

சோதனை

லுபிட்ஸின் வீட்டில் சோதனை நடத்தியபோது அவர் மனஅழுத்தத்திற்காக எடுத்துக் கொண்ட மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Investigating officials told that Germanwings co-pilot Lubitz was treated for eyesight issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X