For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கொலம்பிய அதிபர் ஜூவான் மானுவல் சாண்டோஸிற்கு, அமைதிக்கான நோபல் பரிசு!

Google Oneindia Tamil News

ஸ்டாக்ஹோம்: கொலம்பியாவில் 50 ஆண்டு காலமாக நடந்து வந்த உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டு வந்த கொலம்பிய அதிபர் ஜூவான் மானுவல் சாண்டோஸுக்கு இந்த ஆண்டிற்கான அமைதி நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

கொலம்பிய அதிபராக உள்ள இவர் 1951ல் பிறந்தவர். 65 வயதாகும் இவர் உலகின் சிறந்த விருதாக கருதப்படும் அமைதிக்கான நோபல் பரிசை பெற தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2016ம் ஆண்டிற்கான இந்த விருதுக்காக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு காரணங்களை நோபல் கமிட்டி தெரிவித்துள்ளது.

Colombian President Manuel Santos wins Nobel Peace price

அதில், 50 ஆண்டு காலமாக கொலம்பியால் உள்நாட்டுப் போர் நடைபெற்று வந்தது. இதில் சுமார் 2 லட்சத்து 20 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 6 மில்லியன் மக்கள் அகதிகளாக இடம் பெயர்ந்துள்ளனர். இவ்வளவு பேரை பலி கொண்ட உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டு வந்தவர் ஜூவான் மானுவல் சாண்டோஸ் என்று கூறப்பட்டுள்ளது.
நார்வே நாட்டின் நாடாளுமன்றத்தால் தேர்தெடுக்கப்படும் 5 பேர் கொண்ட கமிட்டியே நோபல் பரிசைப் பெறும் சிறந்த மனிதர்களை தேர்ந்தெடுத்து வருகிறது. அந்த வகையில் அமைதிக்கான நோபல் பரிசை பெற கொலம்பிய அதிபர் ஜூவான் மானுவல் சாண்டோஸ் இந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு அமைதிக்கான நோபால் பரிசை துனீசிய தேசிய பேச்சுவார்த்தைக் குழு பெற்றது. 2011ம் ஆண்டு துனீசிய அதிபர் பென் அலியை ஆட்சிப் பீடத்திலிருந்து வெளியேற்றிய 'ஜாஸ்மின் புரட்சி'க்குப் பிறகு பன்முக ஜனநாயகத்தை துனீசியாவில் கட்டமைக்க துனீசிய தேசிய பேச்சுவார்த்தைக் குழுவின் பங்களிப்பு அபரிமிதமானது என்பதால் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

English summary
Colombian President Manuel Santos was awarded the Nobel Peace Prize.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X