For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அரபு நாடுகளுக்கு தனி 'இன்டர்போல்', கப்பல் படை! கூட்டமைப்பு மாநாட்டில் முடிவு!!

By Veera Kumar
Google Oneindia Tamil News

தோஹா: இன்டர்போல் போன்ற பாணியில் அரபு நாடுகள் கூட்டமைப்பில் உள்ள நாடுகள் தங்களுக்கென்று பொதுவான காவல்துறையையும், பொதுவான கடல்படையையும் நிறுவ முடிவு செய்துள்ளன.

பக்ரைன், குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இணைந்து 'வளைகுடா அரபு நாடுகளுக்கான கூட்டுறவு கவுன்சில்' (GCC) என்ற அமைப்பை 1981ம் ஆண்டு ஏற்படுத்தியிருந்தன.

உச்சி மாநாடு

உச்சி மாநாடு

இந்த அமைப்பின் வருடாந்திர உச்சி மாநாடு கத்தார் நாட்டு தலைநகர் தோஹாவில் நடந்தது. இக்கூட்டத்தில் உறுப்பு நாடுகளின் முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.

போலீஸ் படை

போலீஸ் படை

கூட்டத்தில் இரு முக்கியமான முடிவுகள் இரண்டு எடுக்கப்பட்டுள்ளன. இன்டர்போல் பாணியில், இக்கூட்டமைப்பில் உள்ள அரபு நாடுகளுக்காக பொதுவான காவல்துறையை உருவாக்க இக்கூட்டம் முடிவு செய்துள்ளது. இதற்கு GCC-Pol என்று பெயர் சூட்டப்படும்.

அபுதாபி தலைமையிடம்

அபுதாபி தலைமையிடம்

கத்தார் நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஷேக் காலித் பின் முகமது அல் அட்டியா கூறுகையில் "இந்த போலீஸ் படை தீவிரவாதத்திற்கு எதிராக போராடும். இன்டர்போல் போல வளைகுடா நாடுகளில் இந்த போலீஸ் படை செயல்படும்" என்றார். இந்த போலீஸ் படை அபுதாபியை தலைமையிடமாக கொண்டு இயங்கப்போகிறது.

பொதுவான கடற்படை

பொதுவான கடற்படை

மேலும், அனைத்து உறுப்பு நாடுகளுக்குமான பொதுவான கடற்படை பக்ரைனை தலைமையிடமாக கொண்டு அமைய உள்ளது. இருப்பினும் கப்பல்படை குறித்த மேலதிக தகவல்களை வெளியிட இக்கூட்டமைப்பு மறுத்துவிட்டது.

தீவிரவாதத்தை முறியடிக்க திட்டம்

தீவிரவாதத்தை முறியடிக்க திட்டம்

மேலும், எகிப்து நாட்டு அரசுக்கு ஜிசிசி நாடுகள் முழு ஆதரவை அளிக்கும் என்றும் இக்கூட்டத்தில் ஒரு மனதாக முடிவெடுத்து அறிவிக்கப்பட்டுள்ளது. வளைகுடா நாட்டில் வளர்ந்து வரும் தீவிரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்ள உறுப்பு நாடுகள் இணைந்து செயல்படுவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கூட்டு ராணுவம் தேவை

கூட்டு ராணுவம் தேவை

நேட்டோ படைகளை போல வளைகுடா நாடுகளும் 1 லட்சம் வீரர்களை கொண்ட கூட்டு ராணுவ படையை உருவாக்க வேண்டும் என்று சவுதி அரேபியா கடந்த ஆண்டு முதலே கோரிக்கை விடுத்துவருகிறது. ஏற்கனவே பெனிசுலா ஷீல்டு என்ற பெயரில் ஒரு போலீஸ் கூட்டமைப்பை ஜிசிசி நாடுகள் அமைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Following the 35th GCC Summit on Tuesday, Gulf leaders announced in Doha the creation of a regional police force in addition to a joint naval force, the Associated Press reported.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X