For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிரஸ் மீட்டில் வாய்க்கு முன் பறந்த பூச்சி.. 'லபக்கென' பிடித்து மென்று முழுங்கிய அதிபர்!

பிரஸ் மீட்டின் போது கோஸ்டாரிக்கா அதிபர் வாய்க்கு முன் பறந்த குளவியை லபக்கென சாப்பிட்ட வீடியோ வைரலாகியுள்ளது.

Google Oneindia Tamil News

சான் ஜோஸ்: பிரஸ் மீட்டின் போது கோஸ்டாரிக்கா அதிபர் வாய்க்கு முன் பறந்த குளவியை லபக்கென பிடித்து சாப்பிட்டார். அந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.

மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றானது கோஸ்ட்டாரிக்கா. இந்நாட்டின் கால்பந்து அணி உலகப் புகழ் பெற்றது.

எரிமலைகளுக்கும் பெயர் பெற்றது கோஸ்ட்டாரிக்கா. அடிக்கடி சீற்றம் கொள்ளும் எரிமலைகளால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவது வழக்கம்.

'சுவையான' செய்தி

'சுவையான' செய்தி

கோஸ்ட்டாரிக்கா நாடு குறித்து இதுவரை அதிகம் கேட்ட செய்திகள் இவையே. இந்நிலையில் அந்நாட்டு அதிபர் கிலர்மோ 'சுவையான' செய்தி ஒன்றுக்கு சொந்தக்காரர் ஆகிவிட்டார்.

கோஸ்ட்டாரிக்கா பிரஸ் மீட்

கோஸ்ட்டாரிக்கா பிரஸ் மீட்

அதாவது, கோஸ்ட்டாரிக்காவின் பட்னாரிஸ் நகரில் பிரஸ் மீட் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் அந்நாட்டு அதிபர் கிலர்மோ சோலிஸ் கலந்துகொண்டார்.

அழையா விருந்தாளியாக வந்த பூச்சி

அழையா விருந்தாளியாக வந்த பூச்சி

கேமராக்கள் அனைத்தும் ஆன் செய்திருக்க, பேசத் தொடங்கினார் அதிபர் கிலர்மோ. அப்போது அழைக்கப்படாத விருந்தாளியாக பிரஸ் மீட்டிற்கு வந்த குளவி ஒன்று அவரது வாய்க்கு முன் நீண்ட நேரமாக பறந்து கொண்டிருந்தது.

லபக்கென பிடித்த அதிபர்

லபக்கென பிடித்த அதிபர்

வாய்க்கு மிக அருகில் சென்ற குளவியை லபக்கென பிடித்த அதிபர் அதனை அப்படியே மென்று தின்றார். பின்னர் அதனை நான் தின்றுவிட்டேன் என்றும் அதிபர் கூறினார்.

சிரித்த நிருபர்கள்

சிரித்த நிருபர்கள்

கேமராக்கள் ஆன் செய்திருக்க நிருபர்கள் முன்பு படு மகிழ்ச்சியாக கூறினார் அதிபர். அதனை கேட்டு நிருபர்களும் சிரித்து விட்டனர்.

தூய்மையான புரோட்டின்

தூய்மையான புரோட்டின்

இதைத்தொடர்ந்து தண்ணீர் குடித்த அவர், இது எல்லா நாளும் கிடைக்காது. தூய்மையான புரோட்டின் என்றார். அதிபரின் இந்த அதகள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

English summary
Costa Rican president accidentally ATE a live wasp on air while in the press meet. This video became viral on social medias.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X