For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்துத்துவம் என்சைக்ளோபீடியாவை வெளியிட்ட இங்கிலாந்து பிரதமர் டேவிட் காமரூன்

By Siva
Google Oneindia Tamil News

லண்டன்: இந்துத்துவம் குறித்த என்சைக்ளோபீடியாவை இங்கிலாந்தில் நடந்த தீபாவளி கொண்டாட்ட நிகழ்ச்சியில் அந்நாட்டு பிரதமர் டேவிட் காமரூன் வெளியிட்டார்.

இங்கிலாந்தில் நடந்த தீபாவளி கொண்டாட்ட நிகழ்ச்சியில் அந்நாட்டு பிரதமர் டேவிட் காமரூன் தனது மனைவி சமந்தாவுடன் கலந்து கொண்டார். சமந்தா நீல நிற புடவையில் வந்திருந்தார்.

நிகழ்ச்சியில் இந்துத்துவம் பற்றிய என்சைக்ளோபீடியாவை காமரூன் வெளியிட்டார். 11 புத்தகங்கள் கொண்ட அதை வெளியிட்டு அவர் பேசுகையில், இந்த என்சைக்ளோபீடியா மனித சமூகத்திற்கு முக்கியமான ஒன்றாகும் என்றார்.

David Cameron unveils encyclopaedia on Hinduism in London

ஆயிரம் அறிஞர்களின் சுமார் 25 ஆண்டு கால உழைப்பு தான் இந்த என்சைக்ளோபீடியா. இதை ஸ்வாமி சிதானந்த் சரஸ்வதி தலைமையிலான இந்திய பாரம்பரிய ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

என்சைக்ளோபீடியா இந்து மதம் குறித்து பல விளக்கங்களை அளிக்கும் என்று நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஸ்வாமி தெரிவித்தார். இங்கிலாந்தில் இந்து மக்கள் அதிக அளவில் வசித்து வருகிறார்கள். சட்டம், மீடியா, மருத்துவம், பொறியியல், அகௌண்ட்ஸ், வியாபாரம் என்று பல துறைகளில் இந்து சமூகத்தினர் சிறந்து விளங்கி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
British Prime Minister David Cameron and his wife celebrated Diwali at a special event where he launched an encyclopedia of Hinduism.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X