For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஒரு நாள் என்பது 25 மணி நேரமா மாறப் போகுதாம் பாஸ்.. ஷாக் தரும் விஞ்ஞானிகள்!

இன்னும் 200 மில்லியன் ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரு நாள் என்பது 25 மணி நேரங்களைக் கொண்டதாக இருக்கும் என இங்கிலாந்து விஞ்ஞானிகள் ஆய்வு மூலம் தெரிவித்துள்ளனர்.

Google Oneindia Tamil News

லண்டன்: பூமியில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் காரணமாக இன்னும் 200 மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நாள் என்பது 25 மணி நேரமாக இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பூமி, அதன் சுற்றுப்பாதை, விண்வெளி, சுற்றுச்சூழல் இவை தொடர்பாக சர்வதேச அளவில் விஞ்ஞானிகள் ஆய்வு நடந்தி வருகின்றனர்.

அதன் ஒரு கட்டமாக, கடந்த சில நூற்றாண்டுகளாகவே பூமி சுற்றும் அளவு இரண்டு மில்லி நொடிகள் அதிகரித்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது.

2 மில்லி நொடிகள்...

2 மில்லி நொடிகள்...

தற்போது பூமியானது தன்னைத் தானே சுற்றிக் கொள்ள 24 மணி நேரம் எடுத்துக் கொள்கிறது. இந்நிலையில், இந்த இரண்டு மில்லி நொடிகள், இன்னும் 6.7 மில்லியன் ஆண்டுகளில் ஒரு நிமிடமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

200 மில்லியன் ஆண்டுகளில்...

200 மில்லியன் ஆண்டுகளில்...

இந்த கணக்கின் அடிப்படையில், இன்னும் 200 மில்லியன் ஆண்டுகளுக்கு பின்னர் இது ஒரு மணி நேரமாக மாறும் எனக் கூறப்படுகிறது. எனவே அப்போது ஒரு நாளைக்கு 24 மணி நேரம் என்பது மாறி 25 மணி நேரமாக மாறக்கூடும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

மெதுவான நிகழ்வு...

மெதுவான நிகழ்வு...

கடந்த கால ஆய்வுகளின் அடிப்படையில் இங்கிலாந்து ஆய்வாளர்களால் இந்த புதிய ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இது மிகவும் மெதுவான நிகழ்வாக இருக்கும் என தங்களது ஆய்வில் தெரிய வந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

காற்று மாசுபாடு...

காற்று மாசுபாடு...

மேலும், பூமியில் ஏற்பட்டு வரும் சில மாற்றங்களால் இந்த நேர மாற்றம் ஏற்பட இருப்பதாக இங்கிலாந்து விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதிலும் குறிப்பாக காற்று மாசுபாடு காரணமாக காற்றின் அடர்த்தி அதிகரித்து வருவதாகவும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.

English summary
New research has predicted when our days will be 25 hours long in 200 million years.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X