For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'மெட்ராஸ்' சுவர் மாதிரி மெக்சிகோ சுவரை விட்டுத்தர மறுக்கும் ட்ரம்ப்.. கட்டியே தீருவேன் என உறுதி

"திட்டமிட்ட காலத்திற்கு முன்பே மெக்சிகோ எல்லையில் சுவர் அமைக்கும் பணி ஆரம்பிக்கப்படும்" என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்.

By Veera Kumar
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: மெக்சிகோ-அமெரிக்கா நடுவே சுவர் எழுப்பப்படுவது உறுதி என அமெரிக்க நாடாளுமன்ற உரையின்போது, அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்.

அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு டொனால்டு டிரம்ப் முதல் முறையாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றினார்.

அப்போது தேர்தல் பிரசாரத்தின்போது, வலியுறுத்திய இறுக்கமான கருத்துக்களையே மீண்டும் முன்வைத்தார். அதில் ஒன்றுதான் அமெரிக்காவின் தெற்கு பகுதியிலுள்ள மெக்சிகோ நாட்டுக்கு குறுக்கே தடுப்பு சுவர் கட்டும் திட்டமாகும்.

22 பில்லியன் டாலர்

22 பில்லியன் டாலர்

இந்த திட்டத்தை செயல்படுத்த 22 பில்லியன் அமெரிக்க டாலர் செலவாகும். அதாவது, அமெரிக்காவிலுள்ள குடும்பத்தார் ஒவ்வொருவர் தலையிலும் சராசரியாக 170 டாலர் பாரம் விழும்.

மெக்சிகோவிடம் வாங்க திட்டம்

மெக்சிகோவிடம் வாங்க திட்டம்

இது மிகப்பெரிய செலவு பிடிக்கும் வேலை என்பதால் தனது தேர்தல் பிரசாரத்தின்போது, மெக்சிகோவை இதற்கான செலவில் பங்கு கொடுக்க வைப்பேன் என்று கூறி வந்தார் ட்ரம்ப்.

மெக்சிகோ மறுப்பு

மெக்சிகோ மறுப்பு

ஆனால் அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு, ட்ரம்ப் இவ்வாறு ஒரு கோரிக்கையை மெக்சிகோவிடம் வைத்தபோது அந்த நாடு ஏற்க மறுத்துவிட்டது. எனவே, மெக்சிகோவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்கள் மீது அதிக வரியை விதிக்க ட்ரம்ப் திட்டமிட்டார். ஆனால் அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் திட்டத்தை கைவிட்டார்.

சுவர் உறுதி

சுவர் உறுதி

இந்நிலையில், நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமையாற்றிய உரையின்போது, மெக்சிகோவுக்கும் அமெரிக்காவுக்கும் குறுக்கே சுவர் எழுப்பப்படுவது உறுதி என கூறினார் ட்ரம்ப்.

போதைமருந்து கடத்தல்

போதைமருந்து கடத்தல்

"திட்டமிட்ட காலத்திற்கு முன்பே சுவர் அமைக்கும் பணி ஆரம்பிக்கப்படும். அதை கட்டி முடித்த பிறகு, போதைப்பொருள் மற்றும் குற்றச்செயல்கள் பங்கு குறையும். அதுமிகப்பெரும் லாபத்தை அமெரிக்காவுக்கு பெற்றுத்தரும்" என்று ட்ரம்ப் தெரிவித்தார்.

எல்லா செலவும் அமெரிக்காவுடையது

எல்லா செலவும் அமெரிக்காவுடையது

அதேநேரம், இதற்கான செலவீனத்தை பங்கிடுவது குறித்து தனது உரையில் அவர் குறிப்பிடவில்லை. எனவே அமெரிக்காவே அந்த செலவீனத்தை ஏற்கப்போகிறது என்றே தெரிகிறது. மெட்ராஸ் திரைப்படத்தில் சுவருக்காக பெரும் சண்டையே நடக்கும் காட்சிகளை நினைவூட்டுகிறது இந்த மெக்சிகோ சுவர் பஞ்சாயத்து.

English summary
If Mr Trump is unable to make Mexico bear the costs of the wall then the wall is expected to cost almost $22 billion, or $170 per US household.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X