For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைக்க சர்வதேச விசாரணை அவசியம்... டாக்டர் அன்புமணி பேச்சு (வீடியோவுடன்)

Google Oneindia Tamil News

ஜெனீவா: ஈழத்தில் இலங்கை ராணுவத்தாலும், அரச பயங்கரவாதத்தாலும் அழிக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமானால் அங்கு சர்வதேச விசாரணையாளர்களைக் கொண்ட பன்னாட்டு விசாரணை நடைபெற வேண்டியது அவசியம் என்று பசுமைத் தாயகத்தின் சார்பில் கலந்து கொண்ட பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

ஜெனீவா நகரில் நடந்த மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் பேசும்போது இந்தக் கோரிக்கையை வைத்தார் அன்புமணி.

இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான மனித உரிமை ஆணையர் தாக்கல் செய்த விசாரணை அறிக்கை மீதான பொது விவாதம் நேற்று மாலை நடைபெற்றது. அந்த விவாதத்தில் அன்புமணி பேசியதாவது:

அறிக்கைக்கு வரவேற்பு

அறிக்கைக்கு வரவேற்பு

இலங்கை மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஐ.நா. மனித உரிமை ஆணையர் அலுவலக விசாரணை அறிக்கையை பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் வரவேற்கிறேன்.

தமிழகத்தின் சார்பில் பேசுகிறேன்

தமிழகத்தின் சார்பில் பேசுகிறேன்

இலங்கைத் தமிழர்களின் நலன், உரிமைகள் மற்றும் கண்ணியம் காக்கப்பட வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறை கொண்டுள்ள, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள, 7.7 கோடி மக்களின் சார்பில் நான் இங்கு பேசுகிறேன்.

சர்வதேச விசாரணை அவசியம்

சர்வதேச விசாரணை அவசியம்

இலங்கையில் நடைபெற்ற போரின் போதும், போருக்கு பிறகும் நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்தி வலிமையான, விரிவான அறிக்கையை தாக்கல் செய்ததற்காக ஐ.நா. மனித உரிமை ஆணையர் அலுவலகத்திற்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். மனித உரிமை ஆணையர் அவரது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவாறு, இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்களுக்கு காரணமானவர்கள் யார் என்பது கண்டறியப்பட்டு தண்டிக்கப்பட வேண்டுமானால், உள்நாட்டு நீதிமன்ற விசாரணைக்கு மேலான விசாரணை அமைப்பு தேவையாகும்.

மனித குலத்துக்கு எதிரான போர்க்குற்றம்

மனித குலத்துக்கு எதிரான போர்க்குற்றம்

மனித உரிமை ஆணையர் தாக்கல் செய்த அறிக்கையில் போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான் குற்றச்சாற்றுகள் குறித்து கீழ்க்கண்ட தனித்தனி தலைப்புகளில் விரிவாக விவரிக்கப்பட்டிருக்கிறது.

ஆள் கடத்தல்.. படுகொலைகள்.. பாலியல் பலாத்காரங்கள்

ஆள் கடத்தல்.. படுகொலைகள்.. பாலியல் பலாத்காரங்கள்

சட்டவிரோத படுகொலைகள், சுதந்திரம் பறிக்கப்பட்டது தொடர்பான விதிமீறல்கள், கட்டாயக் ஆள்கடத்தல்கள், சித்திரவதைகள் மற்றும் பிற வடிவிலான கொடுமைகள், மனிதத்தன்மையற்ற மற்றும் சிறுமைப்படுத்தும் வகையில் நடத்தப்படுதல், பாலியல் மற்றும் பாலினம் சார்ந்த வன்முறைகள், 18 வயதுக்கு மேற்பட்டோரை கடத்துதல் மற்றும் கட்டாயப்படுத்தி படையில் சேர்த்தல், குழந்தைகளை படையில் சேர்த்து போரில் பயன்படுத்துதல், போரின் காரணமாக அப்பாவி மக்கள் மற்றும் அவர்களின் பயன்பாட்டுக்கான பொருட்கள் மீது ஏற்பட்ட தாக்கம், மக்கள் நடமாட்டத்தின் மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள், மனிதாபிமான அடிப்படையிலான உதவிகளை செய்வதற்குக் கூட அனுமதி மறுத்தல், அடைக்கப்பட்ட முகாம்களுக்குள் தங்கவைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்த உள்நாட்டு மக்களின் சுதந்திரத்தை பறித்தல் மற்றும் அவர்களை சோதனைக்கு உள்ளாக்குதல்.

உள்ளக விசாரணை சரிவராது

உள்ளக விசாரணை சரிவராது

போர்க்குற்றங்கள் தொடர்பாக உள்ளக விசாரணையை மட்டுமே அனுமதிக்க முடியும் என்று இலங்கை திட்டவட்டமாக கூறிவிட்டது. இலங்கைப் போரில் பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றாத வகையில் கூட்டுத் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டிருப்பதை மனதில் கொண்டு, போர்க்குற்ற விசாரணை அறிக்கைக்கு விடப்பட்டுள்ள இந்த சவாலை சமாளிக்க சரியான நடவடிக்கை தேவைப்படுகிறது.

தார்மீக உரிமை கிடையாது

தார்மீக உரிமை கிடையாது

போர்க்குற்றச்சாற்றுக்கு ஆளாகியுள்ள இலங்கைக்கு, அதன் குற்றங்கள் குறித்து விசாரித்து தீர்ப்பளிக்க தார்மீக உரிமை கிடையாது. மனித உரிமை ஆணையர் அலுவலக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு இலங்கை புதிதாக பதவியேற்ற அரசு கூட மனித உரிமை ஆணையர் அலுவலக விசாரணைக் குழுவை இலங்கைக்குள் அனுமதிக்கவில்லை என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

அச்சத்தில் வாழும் தமிழர்கள்

அச்சத்தில் வாழும் தமிழர்கள்

உள்நாட்டில் இடம் பெயர்ந்த மக்களாக இலங்கைத் தமிழர்கள் இன்னும் அவதிப்பட்டு வருகின்றனர். தமிழ் கிராமங்களில் இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. தமிழர்களிடமிருந்து பறிக்கப்பட்ட நிலங்கள் இன்னும் திரும்ப ஒப்படைக்கப்படவில்லை. கற்பழிப்புகளும், சித்திரவதைகளும் தொடர்கின்றன. தமிழ் மக்கள் இன்னும் அச்சத்தில் வாழ்கின்றனர். அதி உயர் பாதுகாப்பு வலயங்கள் இன்னும் அப்படியே நீடிக்கின்றன.

தமிழக சட்டசபையில் தீர்மானம்

தமிழக சட்டசபையில் தீர்மானம்

இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்களுக்கு எதிராக பன்னாட்டு நீதிமன்ற விசாரணை கோரி ஐ.நா. மனித உரிமை பேரவையில் வலிமையான தீர்மானத்தை இந்திய அரசே கொண்டு வர வேண்டும் என்று கோரி 15.09.2015 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை உங்களின் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.

இந்தியாவின் அமைதி ஏமாற்றம்

இந்தியாவின் அமைதி ஏமாற்றம்

இந்த விஷயத்தில் பன்னாட்டு விசாரணை கோர வேண்டும் என்ற தமிழக மக்களின் கோரிக்கைகள் தொடர்பாக இந்திய அரசு அமைதி காப்பது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.

பாதுகாப்பு அளிக்க ஐ.நா. அலுவலகக் கிளைகள் தேவை

பாதுகாப்பு அளிக்க ஐ.நா. அலுவலகக் கிளைகள் தேவை

போர்க்குற்றம் தொடர்பான விசாரணையின் சாட்சிகளுக்கு போதிய பாதுகாப்பு அளிப்பதற்கு வசதியாக இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் கிளை அலுவலகங்களை அமைக்க வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை ஆணையத்தை பசுமைத்தாயகம் அமைப்பு கேட்டுக் கொள்கிறது.

நீதிக்கு உறுதி செய்யுங்கள்

நீதிக்கு உறுதி செய்யுங்கள்

இலங்கையில் போர்க்குற்றங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்ய வசதியாக பன்னாட்டு நீதிமன்ற விசாரணை நடைமுறையையும், பொறுப்புடைமையை உறுதி செய்வதற்கான அமைப்பையும் ஏற்படுத்தும்படி சர்வதேச சமுதாயத்தை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என்றார் டாக்டர் அன்புமணி.

"ஈழத்தமிழர் நீதி: ஐநா அவையில் நான் இன்று பேசியதன் காணொலி"ஜெனீவா ஐநா மனித உரிமைகள் பேரவையில் (UNHRC) இலங்கை மீது பன்னாட்டு நீதி விசாரணை கோரும் எனது பேச்சின் காணொலி வடிவம்:uN Human Rights Council - General Debate on the report of the Office of the United Nations High Commissioner for Human Rights on Sri Lanka.Dr. Anbumani Ramadoss MP"Thank You Mr.PresidentThis is Dr. Anbumani Ramadoss, Member of Parliament and former Health Minister, Government of India welcoming the OISL report on behalf of Pasumai Thaayagam.I speak on behalf of the seventy-seven million people of Tamil Nadu in India, who are concerned about the welfare, rights and dignity of the Tamil community in Sri Lanka. We thank the Office of the High Commissioner for Human Rights for their strong and comprehensive report on the war crimes and crimes against humanity committed during and after the war in Sri Lanka. As High Commissioner stated in his report, that for “accountability to be achieved in Sri Lanka, more than a domestic mechanism is needed”.The report adequately deals with serious charges or War Crimes and Crimes against humanity and comprises of dedicated sections on· Unlawful killings· Violations related to the deprivation of liberty· Enforced disappearance· Torture and other forms of cruel, inhuman or degrading treatment· Sexual and gender-based violence· Abduction of adults and forced recruitment· Recruitment and use of children in hostilities· The impact of hostilities on civilians and civilian objects· Controls on movement· Denial of humanitarian assistance· Screening and deprivation of liberty of internally displaced persons in closed camps.Sri Lanka has categorically stated that only a domestic mechanism would be allowed. This is a challenge thrown at the OISL report needing a proper response, keeping in mind the inadequate joint resolution tabled is not fulfilling the aspirations of the victims.Sri Lanka stands accused and it has no moral authority to judge its own crimes. As stated in the report, we note that even the new government did not allow the OISL team to visit Sri Lanka.Tamils still languish as Internally Displaced Persons. Army camps are located in Tamil villages. Land grabbed from the Tamils are yet to be returned. Rape and torture continue, and Tamil people still live in fear. The High Security Zones remain.We also bring to your attention the resolution passed by the Tamil Nadu State Assembly in India on September 16, 2015, that called on India to move a 'strong resolution' at the UNHRC seeking an international probe against Sri Lankan government’s human rights violations and war crimes.The silence of the Government of India to the pleas of the people of Tamil Nadu, for demanding an International Inquiry, is highly disappointing.Pasumai Thaayagam urges UNHRC to set up offices in the North and East of Sri Lanka to give adequate witness protection.We call upon the international community to establish an international judicial process and an accountability mechanism, to ensure credible justice is done in Sri Lanka.Thank You Mr. President"

Posted by Anbumani Ramadoss on Wednesday, September 30, 2015

English summary
PMK leader Dr Anbumani urged for International probe into Lankan war crimes during his speech in the UNHRC yesterday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X