For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"ரத்னா கஃபே"வில் டிபன் சாப்பிடலாம்... அதென்னங்க "ரேட்ஸ் இன் கஃபே"?

சான்பிரான்சிஸ்கோவில் உள்ள ஒரு ஹோட்டலில் எலிகளுக்கு மத்தியில் காபி, டீ,டிபன் அருந்தும் புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சான்பிரான்சிஸ்கோ: அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள டிபன் கடையில் எலிகளுடன் கொஞ்சி விளையாடி உணவு அருந்தும் புதிய அனுபவத்தால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நாய், பூனை, கிளி, குருவிகள், புறா உள்ளிட்ட ஜீவன்களை நிறைய பேர் தங்கள் குடும்ப உறுப்பினர்களாகவே பாவிக்கின்றனர். மனிதனுக்கு செய்யும் அனைத்தையும் அதற்கு செய்கின்றனர்.

இதுபோன்ற புத்தி சாதுர்யமிக்க சின்னஞ்சிறிய ஜீவன்கள் நம்முடன் கொஞ்சி விளையாடும் போது மனதுக்கு சந்தோஷத்தை அளிக்கும். இதெல்லாம் சரி எலியை கண்டால் நாம் பயப்படுவோம் அல்லது அட்டகாசம் செய்யும் எலிகளை பொறி வைத்து பிடிப்போம். ஆனால் ஒரு ஹோட்டலில் எலிகளுடன் டிபன் சாப்பிடும் ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி தருகின்றனர் என்றால் நம்புவீர்களா

சான்பிரான்சிஸ்கோவில் ஹோட்டல்

சான்பிரான்சிஸ்கோவில் ஹோட்டல்

சான்பிரான்சிஸ்கோவில் சனிக்கிழமை தொடங்கிய ஒரு ஹோட்டலை பிரபலப்படுத்த அந்த நிர்வாகத்தினர் தீவிரமாக யோசித்தனர். அப்போது அவர்களுக்கு தோன்றியதுதான் இந்த ஐடியா. 7 அல்லது 8 எலிகளுக்கு மத்தியில் வாடிக்கையாளர்கள் சிற்றுண்டி சாப்பிட வைப்பதுதான்.

ஏன் இந்த ஐடியா

ஏன் இந்த ஐடியா

கடந்த 20-ஆம் நூற்றாண்டில் சான்பிரான்சிஸ்கோவில் பிளேக் நோயின் தாக்கத்தால் நிறைய எலிகள் உயிரிழந்தன. இதனால் வெளிநாடுகளில் இருந்து இங்கு வருவோரும், இங்கிருந்து வெளிநாடு செல்வோரும் பிளேக்கால் பீதியடைந்தனர். தற்போது இங்கு பிளேக் நோய் இல்லை என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தங்கள் ஹோட்டலை பிரபலப்படுத்தவும்தான் இந்த வழி.

எலிகளுடன் விருந்து

எலிகளுடன் விருந்து

ஹோட்டலுக்கு வரும் விருந்தினர்களுக்கு பிளேக் குறித்த கதையை முதலில் சொல்கின்றனர். அதே சமயம் பிளேக் நோய் பாதிப்பில்லாத எலிகளை உலவ விடுகின்றன. இவை வாடிக்கையாளர்கள் கொடுக்கும் உணவை கொரிக்கின்றன. இது வாடிக்கையாளர்களின் மனதுக்கு இதமளிக்கிறது.

மக்கள் கூட்டம்

மக்கள் கூட்டம்

கடந்த ஜூலை 1-ஆம் தேதி தொடங்கிய நாள் முதல் 8-ஆம் தேதி வரை ஹோட்டலில் சாப்பிடுவதற்காக வழங்கப்பட்ட நுழைவுச் சீட்டுகள் அத்தனையும் ஒரு மணி நேரத்தில் விற்றுத் தீர்ந்தன. அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியாவின் சில பகுதியில் பூனைகளை உலவவிடும் ஹோட்டல்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Visitors a chance to munch on a breakfast of pastries, coffee and tea, and enjoy a bit of play time with a small handful of rats at San Francisco's pop-up Rat Cafe
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X