For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இனி பேஸ்புக் வீடியோசை உங்க பக்கத்துக்கு திருட முடியாது- பேஸ்புக்கின் புதிய “டூல்”!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: பேஸ்புக்கில் பலதரப்பட்ட வீடியோக்கள் பைரசியாக ஷேர் செய்யப்படுவதாக புகார் எழுந்ததை அடுத்து வீடியோக்களை ஷேர் செய்ய புதிய கட்டுப்பாடுகளை விதிக்க உள்ளது பேஸ்புக். மேலும், வீடியோ திருட்டினை தவிர்க்க புதிய டூல் ஒன்றையும் அறிமுகப் படுத்தியுள்ளது.

பலதரப்பட்ட மக்கள் பேஸ்புக்கில் நடக்கும் வீடியோ பைரசியைப்பற்றி முன் வைத்த விமர்சனங்களை அடுத்து "video matching tool"ஐ அறிமுகப்படுத்தவிருக்கிறது ஃபேஸ்புக்.

இந்த கருவியின் மூலம் வீடியோவை வடிமைத்தவர்கள் தங்கள் வீடியோக்களை யாரேனும் திருடி மறுபடியும் பதிவு செய்துள்ளார்களா என கண்காணிக்க முடியும். அவ்வாறு இருக்கும்பட்சத்தில் அந்த பதிவைப் பற்றி ஃபேஸ்புக்கில் புகார் செய்து அதை நீக்கிடலாம்.

திருடப்பட்ட வீடியோக்கள்:

திருடப்பட்ட வீடியோக்கள்:

கடந்த ஜூன் மாதம் ஆகில்வி எனும் விளம்பர நிறுவனம் நடத்திய ஆய்வு பேஸ்புக்கில் புகழ்பெற்ற வீடியோக்களில் 73 சதவீதம் பல இணையதளங்களில் இருந்து திருடப்பட்டவை என்கிறது.

பைரசி வீடியோக்களால் பதட்டம்:

பைரசி வீடியோக்களால் பதட்டம்:

வீடியோ வணிகத்தை மேம்படுத்த திட்டமிட்ட ஃபேஸ்புக் கடந்த ஜூலை மாதம் முதல்முறையாக கன்டெண்ட் க்ரியேட்டர்களுக்கு தன்னுடைய விளம்பர லாபத்தை பங்கிட்டு தர முடிவெடுத்தது. அப்போது எழுந்த வீடியோ பைரசி பற்றிய விவாதங்களே இந்த கருவியை வடிமைப்பதற்கான மூல காரணம் என்கிறது ஃபேஸ்புக்.

ஏற்றியவருக்கு எச்சரிக்கை:

ஏற்றியவருக்கு எச்சரிக்கை:

தற்போது யூ ட்யூபில் ஒரு வீடியோ உரியவருடைய அனுமதியின்றி ஏற்றப்பட்டால் கூகுள் தன்னிச்சையாகவே அதை கண்டுபிடித்து நீக்கி அதை பதிவேற்றியவருக்கு எச்சரிக்கையும் செய்து விடும்.

கண்காணிப்பதும் எளிதுதான்:

கண்காணிப்பதும் எளிதுதான்:

ஆனால் ஃபேஸ்புக் அறிமுகப்படுத்தவிருக்கும் கருவியோ பதிவேற்றப்பட்ட வீடியோவின் உரிமையாளர் அதனை கண்காணிக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்போது இந்த தொழில்நுட்பத்தை குறிப்பிட்ட கன்டெண்ட் க்ரியேட்டர்களுக்கு மட்டும் வழங்கி சோதித்து வருகிறது ஃபேஸ்புக் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Facebook has announced measures to tackle video piracy on its website.The company said new video matching technology would alert selected content creators if their videos were reposted to Facebook without permission.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X