For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இன்ஸ்டாகிராமில் பாதுகாப்பு குறைபாடு.. கண்டுபிடித்த 10 வயது சிறுவனுக்கு 10 ஆயிரம் டாலர் பரிசு

By Veera Kumar
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: இன்ஸ்டாகிராமில் பாதுகாப்பு குறைபாடு இருந்ததைக் கண்டுபிடித்த 10 வயது சிறுவனுக்கு, பேஸ்புக் நிறுவனம் 10,000 அமெரிக்க டாலரை பரிசாக வழங்கியுள்ளது.

பேஸ்புக் நிறுவனத்தின் போட்டோ ஷேரிங் வெப்சைட் இன்ஸ்ட்டாகிராம். இதில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதை பின்லாந்தைச் சேர்ந்த 10 வயது மாணவன் ஜானி கண்டுபிடித்துள்ளான்.

இந்த இணையத்தில் வயது வித்தியாசம் இன்றி யார் வேண்டுமானாலும் சென்று பதிவுகளை அழிக்கும் வகையில் பாதுகாப்பு குறைபாடுகள் இருந்தது. இதை இந்த சிறுவன் தனது கண்டுபிடிப்பு மூலம் பேஸ்புக் நிறுவனத்திற்கு தெரிவித்தான்.

பரிசு

பரிசு

இதையடுத்து அந்த தவறை திருத்திக் கொண்ட பேஸ்புக் நிறுவனம், தவறை சுட்டி காட்டிய ஜானிக்கு 10,000 அமெரிக்க டாலர் பரிசு வழங்கியுள்ளது.

இரு மாதமாகிவிட்டது

இரு மாதமாகிவிட்டது

இதுகுறித்து பேஸ்புக் வெளியிட்டுள்ள அறிக்கை: இன்ஸ்டாகிராமில் பாதுகாப்பு குறைபாடு (பக்) இருப்பதையும், அதை ஒரு மெசேஜை அழித்ததையும் ஜானி நிரூபித்து இருந்தார். இதையடுத்து அந்த குறைபாடு கடந்த பிப்ரவரி மாதம் சரி செய்யப்பட்டது. இதையடுத்து ஜானியை பாராட்டி பரிசு வழங்கப்பட்டது என்று தெரிவித்துள்ளது.

கம்ப்யூட்டர்

கம்ப்யூட்டர்

இதுகுறித்து ஜானி கூறுகையில், பாதுகாப்பு குறைபாட்டை பயன்படுத்தி பிரபலங்களின் பதிவுகளையும் அழிக்கலாம். எனக்கு கிடைத்த பரிசுப் பணத்தில் எனது சகோதரர்களுக்கு கம்ப்யூட்டர் வாங்குவேன், எனக்கு பைக் வாங்குவேன்' என்று தெரிவித்தார்.

பல லட்சம் டாலர்கள்

பல லட்சம் டாலர்கள்

கடந்த 2011ஆம் ஆண்டில் இருந்து இதுவரை, தவறுகளை சுட்டிக் காட்டிய 800 பேருக்கு 4.3 மில்லியன் டாலர் பரிசு தொகையை பேஸ்புக் வழங்கியுள்ளது என கடந்த பிப்ரவரி மாதம் பேஸ்புக் தெரிவித்து இருந்தது நினைவிருக்கலாம்.

English summary
The social networking giant has paid $10,000 to a 10-year-old boy for spotting a bug in Facebook-owned photo-sharing platform Instagram.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X