For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கிண்டலடித்த நோபல் விஞ்ஞானிக்கு.. "செக்ஸி"யாக பதிலடி கொடுத்த பெண் விஞ்ஞானிகள்

Google Oneindia Tamil News

லண்டன்: பெண் விஞ்ஞானிகள் குறித்து நோபல் பரிசு பெற்ற ஆண் விஞ்ஞானி டிம் ஹன்ட் தெரிவித்த கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெண் விஞ்ஞானிகள் தங்களது புகைப்படங்களை டிவிட்டரில் போட்டு பதிலடி கொடுத்துள்ளனர்.

இந்த நூதனப் போட்டியை #distractinglysexy என்ற பெயரில் டிரெண்டிங்கும் ஆக்கி விட்டனர். இது அறிவியல் உலகில் சற்று சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

டிம் ஹன்ட் ஒரு அறிவியல் மாநாட்டின்போது செய்தியாளர்களிடம் பேசுகையில், பெண்களுடன் இணைந்து ஆய்வகத்தில் பணியாற்றுவது எப்போதுமே சிக்கல் நிறைந்தது. ஆய்வகத்தில் 3 விஷயம் தவறாமல் நடக்கும். ஆண் மீது பெண் காதல் கொள்ளுவார், பெண் மீது ஆண் காதல் கொள்ளுவார். ஆனால் பிரச்சினை வரும்போது பெண் அழுதே காரியத்தை சாதித்து விடுவார் என்று கூறியிருந்தார்.

இந்தக் கருத்து அறிவியல் உலகில், குறிப்பாக பெண்ணுரிமைவாதிகளிடம் எதிர்ப்பைக் கிளப்பி விட்டு விட்டது. டிம் ஹன்ட்டுக்கு பெண் விஞ்ஞானிகள் தக்க பதிலடி தர வேண்டும் என்று பலரும் சமூக வலைதளங்களில் அழைப்பு விடுக்க ஹேஷ்டேக் போட்டு களத்தில் குதித்து விட்டனர் பெண்கள்.

ஆனால் தனது பேச்சுக்கு இப்படி எதிர்ப்பு கிளம்பும் என்பதை எதிர்பாராத டிம் ஹன்ட் தான் பேசியது சாதாரணமாகத்தான் என்று கூறியுள்ளார். மேலும் லண்டன் பல்கலைக்கழக கல்லூரியில் பணியாற்றி வந்த அவர் தனது வேலையையும் ராஜினாமா செய்து விட்டார்.

#DistractinglySexy டிரண்டிங் ஆன வேகத்திலேயே 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டிவிட்கள் குவிந்து விட்டன. அதில் பல பெண் விஞ்ஞானிகள் புகைப்படங்களை எடுத்துப் போட்டிருந்தனர்.

தற்போது இந்தப் பிரச்சினை கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளது. இருப்பினும் அறிவியல் உலகிலும் இப்படி ஒரு சம்பவம் நடந்தது சலசலப்பை ஏற்படுத்தி விட்டது.

English summary
Female scientists have been sharing "distractingly sexy" photos of themselves after a feminist website encouraged them to respond to comments by a Nobel laureate.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X