ஃபெட்னா 2017: வட அமெரிக்க தமிழ்ப் பேரவை விழா... கவிதா இராமசாமி, சுந்தரவடிவேல் பங்கேற்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

மினசோட்டா: வட அமெரிக்க தமிழ்சங்கமும் மினசோட்டாத் தமிழ்ச் சங்கமும் இணைந்து நடத்தும் 30ம் பேரவைத் தமிழ் விழாவில் சிறப்பு விருந்தினராக, கவிதா இராமசாமியும், பிராணயாமம் பயிற்சியாளர் சுந்தரவடிவேலும் பங்கேற்கிறார்கள்.

கவிதா இராமசாமி:

கவிதா இராமசாமி சென்னை, டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரி, அமெரிக்காவிலிருக்கும் ஜான் மார்சல் சட்டக்கல்லூரி ஆகியவற்றில் சட்டம் பயின்றவர்.

FeTNA 2017 : Federation of Tamil Sangams of North America Tamils function, Kavitha Ramasamy and Sundaravadivelu is a Chief guest.

நியூயார்க் நகரில் குடிவரவுச்சட்டங்கள் குறித்தான பணியைச் செய்து வருகிறார். பேரவையின் நிர்வாகக்குழுவிலும் பங்காற்றிய அனுபவம் அவருக்கு உண்டு.

புலம்பெயர்ந்து வாழும் நம்மவர்க்கு, ஏதேனும் குடிவரவுச் சட்டங்கள், அண்மைய மாற்றங்கள் குறித்தான தகவல் குறித்தான கலந்துரையாடல் ஒன்றினை ஏற்கனவே பேரவை இவரது பங்களிப்பை வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து, பேரவையின் தமிழ்த் திருவிழாவிலும் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சி இணைய வழியில் இடம் பெறப் போகிறது. உதவி தேவைப்படுவோர், அந்நிகழ்ச்சியில் பங்கேற்று, குடிவரவு, குடியேற்றச் சட்டங்கள் குறித்த, மாற்றங்கள் குறித்த தகவலைக் கேட்டுப் பெற்று பயனுற அழைக்கப்படுகிறார்கள்.

இவர் குடியேற்ற சட்டமாற்றங்கள் - கருத்தரங்கம் நிகழ்ச்சியில் வரும் ஜூலை 1ம் தேதி பங்கேற்று பேசுகிறார்.

சுந்தரவடிவேல் பிராணாயாமம் பயிற்சியாளர்

அமெரிக்கத் தமிழ் விஞ்ஞானியான டாக்டர் சுந்தரவடிவேல் பாலசுப்ரமணியன் அவர்கள் தென் கரொலைனா மருத்துவப் பல்கலைக்கழகத்தில் ஆய்வாளராகப் பணிபுரிகிறார்.

பிராணயாமம், திருமூலரின் மந்திர வழி மூச்சுப் பயிற்சி குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். பிராணயாம அறிவியல், PRANASCIENCE எனும் நூலையும் எழுதி வெளியிட்டு இருக்கிறார். அமெரிக்கத் தமிழ்த் திருவிழாவில், திருமூலரின் மூச்சுப்பயிற்சி குறித்து ஓர் இணைப்பயிலரங்கு நடத்தவுள்ளார். ஆர்வலர்கள் பங்கேற்றுப் பயனுறலாம்.

மிகச் சுருக்கமாகவும் அழகாகவும் the famous TED talk ஒன்றையும் வழங்கியிருக்கிறார். இவரின் திருமூலர் பிராணயாமம் பற்றிய கருத்தரங்கம் வரும் ஜூலை 1ம் தேதி நடைபெறுகிறது.

ஆயிரத்தில் ஏன்? லட்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள், தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்!

English summary
FeTNA 2017 : Federation of Tamil Sangams of North America Tamils function, Kavitha Ramasamy and Sundaravadivelu is a Chief guest at Minneapolis Convention Center in Minnesota.
Please Wait while comments are loading...
வேலைவாய்ப்புகள்