For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அமெரிக்க அதிபர் தேர்தல்.. ஹிலரி - டிரம்ப் இடையே அனல் பறந்த முதல் நேரடி விவாதம்!

By Shankar
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஹிலரி க்ளிண்டன் மற்றும் டொனால்ட் ட்ரம்ப் இருவரும் முதல் முறையாக நேரடி தொலைக்காட்சி விவாதத்தில் இன்று பங்கேற்றனர்.

உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 100 மில்லியன் பேருக்கும் மேல் பார்த்த இந்த விவாதத்தை நேரில் காணவும் ஏராளமான மக்கள் குவிந்தனர்.

First Presidential debate begins

அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் 8-ம் தேதி நடக்கிறது. இதில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலரி கிளிண்டன், குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் மோதுகின்றனர்.

தேர்தலுக்கான இடையேயான நேரடி விவாதம் அங்குள்ள ஹோப்ஸ்ட்ரா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இந்த விவாதம் அமெரிக்க தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. 2-வது விவாதம் அக்டோபர் 9ம் தேதியும், இறுதி விவாத நிகழ்ச்சி அக்டோபர் 19ம் தேதி நடைபெறவுள்ளது.

இந்த விவாதங்கள் அதிபர் பதவியைப் பிடிக்க பெரிதும் உதவும் என்று நம்பப்படுகிறது.

தடாலடியாக பேசும் ட்ரம்பை ஹிலரி எப்படிச் சமாளித்துப் பேசப் போகிறார் என்பதை அறியும் ஆவலில் ஏராளமான அரசியல் ஆர்வலர்கள் நேரிலும் தொலைக்காட்சி வழியாகவும் பார்க்க ஆவலோடு குவிந்துவிட்டனர்.

English summary
The first presidential debate between Hillary Clinton and Donald Trump was held today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X