For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அமெரிக்காவில் மறுமணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

By Siva
Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்காவில் 10ல் 4 தம்பதிகள் மறுமணம் செய்து கொள்கிறார்களாம்.

அமெரிக்காவில் பலர் திருமணம் செய்யவே யோசிக்கிறார்கள். அதை மீறியும் செய்பவர்களில் கிட்டத்தட்ட 40 சதவீதம் பேர் விவாகரத்து பெற்று மீண்டும் வேறு ஒருவரை திருமணம் செய்கிறார்கள்.

கடந்த 2013ம் ஆண்டில் நடந்த 10ல் 4 திருமணங்களில் குறைந்தது ஒருவராவது ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர் அல்லது துணையை இழந்தவர். 10ல் 2 திருமணங்களில் மணமகன் மற்றும் மணமகள் ஆகியோர் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர்கள் என்று அமெரிக்க அரசு அளித்துள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் மறுமணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதையே இந்த தகவல் நிரூபிக்கிறது. அமெரிக்காவில் உள்ள 4.2 கோடி பேர் ஒரு முறைக்கு மேல் திருமணம் செய்து கொண்டவர்கள். இந்த எண்ணிக்கை 1980ல் 2.2 கோடியாக இருந்தது.

1960ம் ஆண்டு வரை அமெரிக்காவில் மறுமணம் செய்தவர்களின் எண்ணிக்கை 1.4 கோடி ஆகும். அமெரிக்காவில் விவாகரத்து பெறுவோரின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளது மறுமணம் செய்து கொள்வோரின் எண்ணிக்கை அதிகரிக்க காரணமாக கூறப்படுகிறது.

தற்போது உள்ள திருணமனமான தம்பதிகளில் கால்வாசி பேர் ஏற்கனவே திருணமாகி விவாகரத்து ஆனவர்கள் அல்லது துணையை இழந்தவர்கள். விவாகரத்தாகியோ அல்லது வாழ்க்கை துணையை இழந்தோ மறுமணம் செய்யாமல் உள்ளவர்களில் 10ல் இரண்டு பேர் மறுமணம் செய்ய விரும்புகிறார்கள். மேலும் 10ல் 3 பேர் மறுமணம் செய்வதா வேண்டாமா என்று உள்ளனர். 45 சவீதம் பேர் மறுமணம் செய்ய விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே திருமணமே வேண்டாம் என்று கூறுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

English summary
According to a report four in ten couples in the USA are getting remarried.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X