For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலவச கருக்கலைப்பு... அமைதி காக்கும் அரசு: சீனாவில் சூடு பறக்கும் விவாதம்

Google Oneindia Tamil News

பீஜிங்: சீனாவில், முறையற்ற கருக்கலைப்புகளால் பெண்களின் உடல் நிலை பாதிக்கப் படுவதால், அரசாங்கமே இலவச கருக்கலைப்பு செய்ய வேண்டும் என்ற பீஜிங் மாநகர மக்கள் காக்கிரஸ் தலைவரின் கோரிக்கைக்கு சாதகமாகவும், பாதகமாகவும் கருத்துப் போரட்டம் வலுத்துள்ளது.

சமீபத்திய ஆய்வின் படி, சீனாவில் இளைஞர்கள் பாதுகாப்பற்ற உடலுறவில் ஏடுபடுவதாக தகவல் வெளியானது. இதனால், கருவுரும் பெண்கள் முறையற்ற கருக்கலைப்புக்கு முயல்வதால், உடல் நீதியாகவும், மன ரீதியாகவும் மற்றும் பொருளாதார ரீதியாகவும் பெரிதும் பாதிப்பிற்கு ஆளாகிறார்கள் எனத் தெரிய வந்துள்ளது.

மேலும், பாதுகாப்பற்ற உடலுறவால் கருவுறும் பெண்கள் பெற்றோருக்குத் தெரியக்கூடாது என்பதற்காக கருக்கலைப்பு செய்வதற்காக தனியார் மருத்துவமனைகளுக்கு செல்வதாகவும் இந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

ஆதலால், முறையான மருத்துவக் கல்வி பெறாதவர்களால் செய்யப் படும் கருக்கலைப்புகளால் சம்பந்தப்பட்ட பெண்களின் உடல் நலம் கேள்விக்குறியாகி விடுவதாக கவலை தெரிவித்த பீஜிக் மாநகர மக்கள் காங்கிரச் துணைத்தலைவர் வெய் ஐமின், ‘எனவே இந்தப் பிரச்சினை தீர்க்கப்படவேண்டும் எனில், பெண்களுக்கு அரசாங்க மருத்துவமனைகளே இலவச கருக்கலைப்பினை செயல்படுத்த முன்வர வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்துள்ளார்.

தற்போது இவரது கருத்துக்கு ஆதரவாகவும், எதிர்த்தும் இணையதளத்தில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அதில், அரசே இதுபோன்ற இலவச கருக்கலைப்பினை மேற்கொள்ளத் தொடங்கினால், குழந்தைக் கட்டுப்பாடு, எயிட்ஸ் போன்ற நோய் தாக்காமல் இருப்பதற்காகப் பாதுகாப்பான உடலுறவு என்று அரசு செய்யும் விளம்பரங்களுக்கு அர்த்தமில்லாமல் போய்விடும். மேலும், கருக்கலைப்பு செய்வதற்கான செலவுத்தொகை இன்னும் அதிகரிக்கப்பட வேண்டும். அப்போதுதான் முறையற்ற உறவுகள் குறையும் என ஒரு சாரார் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

ஆனால், மற்றொரு சாராரோ இதுபோன்ற முறையற்ற உறவுகள் நடைபெறுவதற்குக் காரணம் மக்களிடையே போதுமான அளவு பாலியியல் கல்வி அறிவு இல்லாதுதான். கருக்கலைப்பு செலவினை அதிகரிப்பதால் இதனை நடைமுறைப்படுத்த முடியாது. இதுபோன்ற சிக்கல்களில் மாட்டிக்கொள்ளும் பெண்களை பணத்தேவையின் மூலம் மேலும் துன்பத்தில் தள்ளக்கூடாது என வாதாடுகின்றனர்.

அனல் பறக்கும் வாதங்கள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க அரசோ தொடர்ந்து மவுனம் சாதித்து வருவது குறிப்பிடத்தக்கது.

English summary
A Chinese legislator is asking the government to give college girls the facility of free abortions in public hospitals. The call has attracted supporters and critics in equal numbers, with opponents saying it will encourage irresponsible sex among the youth.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X